| தமிழ்-ஆங்கில Toast Masters Club டாலஸ்: முத்தமிழ் விழா
 சிகாகோ: 'பொன்னியின் செல்வன்'
 NETS: சித்திரை விழா
 BTS: சூப்பர் மெல்லிசை
 புறநானூறு மாநாடும் போட்டிகளும்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விஸ்வசாந்தி: பரதநாட்டியம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2013 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஏப்ரல் 7, 2013 அன்று, 'விஸ்வசாந்தி டான்ஸ் அகாடமி', அதன் கலை இயக்குநர் லதா சுரேஷ் தலைமையில் கான்கார்ட் சிவ முருகன் ஆலய நிதிக்காக, கபர்லி கம்யூனிடி சென்டர் அரங்கில், 'பத்மே-ஆசிய கலாசாரத்தில் தாமரையின் மகத்துவம்' என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. தாமரை மலரின் வேர் சேற்றில் இருந்தாலும், அது நீருக்கு மேல் உயர்ந்து மலர்ந்து தூய்மையானதாகவும் அழகானதாகவும் விளங்குகிறது. அதுபோல மானுடரும் தீய எண்ணங்களாகிய அழுக்கை அகற்றி உயர்ந்த தெய்வ நிலைக்கு உயரலாம் என்பதைத் தாமரை மலர் குறிப்பால் காட்டுகிறது. 'பத்மே'  என்பது சம்ஸ்கிருதத்தில் 'பத்மம்' என்பதன் விளிச்சொல். 'ஒம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரம் பௌத்தத்தில் உண்டு. 
 இந்து சமய அடிப்படையில், மஹாவிஷ்ணு பாற்கடலிலிருந்து ஒரு தங்கத் தாமரையில் உதித்தார். அவரது தொப்புளிலிருந்து ஒரு தாமரை தோன்றியது. அதில் பிரம்மா வீற்றிருந்தார். கலைமகள், மலைமகள் என இருவருக்கும் ஆசனமாகத் தாமரை விளங்குகிறது. பாலமுருகனும் ஆறு தாமரைகளில் பொறியாக வீழ்ந்து அவதரித்தவன்தான். ஆக, இவ்வாறு தாமரையிலிருந்து ஆரம்பிக்கும் நாட்டிய நிகழ்ச்சி, இறுதியில் கடவுளின் பாதத் தாமரையில் நம் இதயத் தாமரையைச் சமர்ப்பித்து முடிவுறும்.
 மேற்கண்ட பரத நிகழ்ச்சி 25 பேரைக் கொண்டது. ஹரிணி கிருஷ்ணன் விகாஸ் பாடல்களை எழுதியுள்ளார். பின்னணியில்: குரு வி. கிருஷ்ணமூர்த்தி, டில்லி, ஹரிணி விகாஸ், நாராயணன், சாந்தி நாராயணன், ரிஷிகேஷ் சாரி ஆகியோர்.
 
 விஸ்வ சாந்தி அகாடமி ஸ்ரீ லதா சுரேஷால் 1999ல் துவங்கப் பெற்றது. சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை நடத்தி வருகிறது. நாட்டியம், யோகம் மற்றும் பல துறைகள் மூலம் உலக அமைதியைப் பரப்பப் பாடுபடுகிறது. ஸ்ரீலதா சுரேஷ் குழுவினர் சான்பிரான்சிஸ்கோ இனம்சார் நடன விழாக்களில் 2008, 2012, 2013ல் பங்கேற்றுள்ளனர். 'Brain Tumor Foundation' அமைப்புக்கு நிதி திரட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
 
 மேலும் விவரங்களுக்கு: http://www.shreelatasuresh.com/danceschool.html
 கடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய: http://vimeo.com/29769805
 நுழைவுச் சீட்டு: $50 (VIP), $25, $15, $10 (Students)
 ஆன்லைனில் வாங்க: Sulekha.com
 தொடர்புகொள்க: vishwashanthidance@yahoo.com
 | 
											
												|  | 
											
											
												| சத்யா - 650-888-2158, அனு - 650-430-2236
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தமிழ்-ஆங்கில Toast Masters Club
 டாலஸ்: முத்தமிழ் விழா
 சிகாகோ: 'பொன்னியின் செல்வன்'
 NETS: சித்திரை விழா
 BTS: சூப்பர் மெல்லிசை
 புறநானூறு மாநாடும் போட்டிகளும்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |