| வேட்பாளர் தேர்வில் காங்கிரசில் குழப்பம்! தர்மபுரி யாருக்கு?
 தேர்தல் கமிஷனின் எச்சரிக்கை!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பிரச்சார களத்தில் ஜெயலலிதா |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஏப்ரல் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| மார்ச் மாதம் 9ம் தேதி முதல் அ.தி.மு.க.வின் பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தன்னுடைய பிரச்சாரத்தை மின்னல் வேகத்தில் துவக்கிவிட்டார். 
 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 இடங்களில் 33 இடங்களில் போட்டி யிடுகிறது. மீதி 7 தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.க. போட்டியிடுகிறது.
 
 அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெருமளவில் எதிர்க்கட்சிகளைப் பற்றிய விமர்சனங்கள் தென்படுகின்றன. தனிநபர் தாக்குதல் அதிகம் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ளது என்கிற எதிர்க் கட்சிகளின் புகாரினால் தேர்தல் கமிஷன் அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை நகலைக் கேட்டிருக்கின்றது.
 | 
											
												|  | 
											
											
												| ஜெயலலிதாவின் பிரச்சாரத்தில் "சோனியா வெளிநாட்டுக்காரர்", "ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளிடம் இன்றும் நேசம் பாராட்டும் ம.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் சோனியா வின் சந்தர்ப்ப வாதக் கூட்டு" என்று விளாசித்தள்ளுகிறார். "முரசொலி மாறன் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்பதால்தான் பா.ஜ.க. அணியிலிருந்து கருணாநிதி விலகினார்" என்று ஜெயலலிதா சொல்லப்போக இப்போது அதை எதிர்த்துக் கலைஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
 கருணாநிதியின் பிரச்சாரம் தொடங்கி சூடு பிடித்தவுடன்தான் தேர்தல் அனல் வீச ஆரம்பிக்கும்.
 
 கேடிஸ்ரீ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வேட்பாளர் தேர்வில் காங்கிரசில் குழப்பம்!
 தர்மபுரி யாருக்கு?
 தேர்தல் கமிஷனின் எச்சரிக்கை!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |