|
| நவம்பர் 2025: வாசகர் கடிதம் |
   |
- | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
அக்டோபர் மாதத் தென்றலில், அரசியலில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளின் விபரீதப் போக்கினால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வருத்தமாக உள்ளது. திலக், சிந்தூரைப் பற்றிய சுருக்கமான விளக்கம் அற்புதம்.
அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் கவிதைகளைப் படைப்பவர் என்றும், சுழலும் கவியரங்கம் என்ற புதுமையைத் தந்தவர் என்றும் பாராட்டுப் பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களைப் பற்றிய விவரங்கள் அருமை. ஹைக்கூ கவிதைகள், என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து, அந்த மரணம் அறிவிக்கப்படவில்லை, நிலவுகள், மனதை உருக்கிய வார்த்தைகள் மறக்கமுடியாதவை. நன்றி.
மணிராம் கார்த்திக்கின் 'தூய்மை இந்தியா' நல்ல சிறுகதை.
அரசியலிலும், எழுத்துலகிலும், திரைத்துறையிலும் சிறப்பாகச் செயல்பட்ட சின்ன அண்ணாமலை அவர்களின் நேர்காணல், அலமாரி பகுதியில் அற்புதமாக இருந்தது.
சின்னக் கதையில் ருக்மிணி கல்யாணம் விபரங்கள் தெரிந்து கொண்டோம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையை உலகம் அறியக் காரணமான மஹேந்திரநாத் குப்த மஹாசயர் வாழ்க்கையைப் படித்து மகிழ்ந்தோம்.
நாம் நம் மனதைச் செப்பனிடாவிட்டால் நம்மால் வெற்றிபெற முடியாது என்ற சத்குரு அவர்களின் பயிற்சிமுறை வரவேற்கத் தக்கது. சத்குருவின் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எழுத்தாளர் ச. கலியாணராமன் குறித்த விவரங்களும் அவரது சிறுகதையும் சுவாரஸ்யம். தென்றலுக்கு மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள். நன்றி. |
|
|
சசிரேகா சம்பத் குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|
|
|
|