|  | 
											
											
												| 
                                                        
	                                                        | நவம்பர் 2016: வாசகர் கடிதம் |    |  
	                                                        | - ![]() | ![]() நவம்பர் 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| அக்டோபர் 2016 இதழின் 'புதிரான மனைவி' சிறுகதை இங்கு வரும் ஒவ்வொரு மனைவி/அம்மாவுக்கும் பொருந்தும். என் மனைவி மாமியார் இருந்தால் அவர்களையும், பையன் வீட்டுக்குப் போனால் மருமகளையும், பெண்வீட்டில் பெண்ணை அல்லது அவள் மாமியாரையும், தன் வீட்டுக்கு அம்மா வந்தால் அவரையும் கேட்டுத்தான் சமையல் செய்வாள். 
 G. ஸ்ரீனிவாசன்,
 ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
 
 *****
 
 ஆகஸ்ட் மாதத் தென்றல் இதழில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் படித்தேன். அதில் அவர் மும்பையில் ராமாயண உபன்யாசத்தின்போது தமிழறியாத ஒரு பெண்மணி தவறாமல் தினமும் வந்து உட்கார்ந்திருந்து, ஸ்ரீராமரின் முகத்திலிருந்த புன்னகையைப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தை விவரித்திருந்தார். 'எங்கெல்லாம் ராமநாமம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமார் உட்கார்ந்திருப்பார்' என்று ஒரு சுலோகம் இருப்பது நினைவுக்கு வந்தது. இந்தப் பெண்மணி வடிவத்தில் ஹனுமாரே வந்திருந்தாரோ என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
 
 Prof. Dr. வேதகிரி கணேசன்,
 சிகாகோ, இல்லினாய்ஸ்
 
 *****
 
 தென்றல் அக்டோபர் இதழில் வெளிவந்துள்ள கவிமாமணி இளையவன் நேர்காணல் அருமை. சுகி சிவம் அவர்களின் சமயோசிதக் கவிதை வரிகள் அருமை. இளையவனை நினைவுபடுத்திய 'தென்றல்' மேலும் வெற்றிநடை போட எனது வாழ்த்துக்கள்.
 
 ம.வே. மாணிக்க வாசகம்,
 பியர்லாந்து, டெக்சஸ்
 | 
											
												|  | 
											
											
												| 
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |