|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| அன்புள்ள சிநேகிதியே, மிகவும் தனிமையாக உணர்கிறேன். இந்த கோவிட் சூழ்நிலையில் 16 மாதங்களாக work from home. பைத்தியம் பிடித்துவிடும்போல இருக்கிறது. திருமணம் நிலைக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னால் மணமுறிவு. ஒரே பையன். அப்போது 5 வயது. வேலை காரணமாக நான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்யவேண்டி இருந்தது. அதைக் காரணம்காட்டி முந்தைய கணவர் எனக்கு visitations rights கொடுத்துவிட்டான். பையனின் நன்மைக்காக நானும் ஒப்புக் கொண்டேன். அவன் அப்பாவுடன் தங்கி இருந்தான். இப்போது 9 வயது. I am a busy professional. ஒரு தாய்போல அவனுடைய அப்பாதான் கவனித்துக் கொண்டு இருந்தான். ஆனால், போன வருடம் எங்கும் பயணம் போகாத சூழ்நிலையில், என் பையனை miss செய்தேன். மனிதர்களுக்கு ஏங்க ஆரம்பித்தேன். என் அம்மாவை வரவழைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், இப்போதுதான் தடுப்பூசி போட்டு நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்திருக்கிறது. இதை எழுதும்போது இந்தியாவில் இரண்டாவது அலை. அம்மாவால் தனியாக வரமுடியாது. நான் போய் அழைத்துவர இருந்த தருணத்தில், இந்தியாவில் இந்த நிலை வரவே, என்னைக் கண்டிப்பாகக் கிளம்பி வரவேண்டாம் என்று அம்மா சொல்லிவிட்டாள். எனக்கு இன்னும் கிரீன் கார்ட் இல்லை. I am stuck here. அம்மாவுடன் இல்லையே என்ற தவிப்பு வேறு. எல்லோரும் தனியாக இருக்கும் போது, சமையல், சங்கீதம் என்று முழுகிவிடுகிறார்கள். எனக்கு இரண்டிலும் ஆர்வம் இல்லை. பூஜை, சுலோகம் என்றும் பெரிய பக்தை இல்லை. work... work.. work.. I enjoyed traveling for my work. என்னுடைய நண்பர்கள் பலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. குழந்தைகளுக்கு மட்டும் பள்ளிக்கூடம் திறந்துவிட்டால் போதும். வீட்டிலிருந்து வேலை செய்வது பழகிவிட்டது என்கிறார்கள். எனக்கு ஆயுள்தண்டனை போல இருக்கிறது. ஒரு நண்பர்மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. எனக்கு இந்தத் தனிமையைத் தவிர்க்க ஏதாவது வழி சொல்லுங்களேன், ப்ளீஸ்.
 
 நன்றி
 
 
 இப்படிக்கு,.................
 | 
											
												|  | 
											
											
												| அன்புள்ள சிநேகிதியே ஒரு வருடம் நாம் எல்லோரும் இந்த நிலையில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ்ந்தது போல, இந்த வருடமும் கடந்து போகும். இதுதான் எதார்த்தம். ஆனால், இன்றுவரை பாதுகாப்பாக இருக்கிறோம்; வசதியுடன் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறோம். உடல் நலத்துடன் இருக்கிறோம். எல்லாமே blessings தான். இன்னும் சில மாதங்களில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கழிக்கும்போது, இந்த மனச்சோர்வு குறையும்.
 
 You are a professional. Smart person. 4 வருடங்களாக practical ஆக இருந்திருக்கிறீர்கள். உங்கள் மகனின் எதிர்காலத்தை, அதாவது பாதுகாப்பை, கருதி அவனைத் தந்தையுடன் இருக்க ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய 5 கருத்துக்களை மட்டும் தெரிவிக்கிறேன்.
 
 * இன்னும் சில மாதங்களில் உங்கள் தனிமை மறைந்து போகும்.
 * உங்கள் தொழில் உங்களுக்கு ஒரு போதைப் பொருளாக இருந்திருக்கிறது. இந்தத் தனிமையில், அந்தப் போதையிலிருந்து நீங்கள் மெள்ள மெள்ள வெளிவந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குப் படுகிறது.
 * எப்போது, எதெல்லாம் உங்களுடைய Priorities/Intrest இவையல்ல என்று நினைக்கிறீர்களோ, அப்போது உங்களுடைய ஆர்வங்கள் என்ன என்று யோசித்துப் பாருங்கள். சிறுவயதில் உங்களுக்கு இருந்த ஆர்வங்கள் ஆழ்மனதில் புதைந்து இருக்கும். அவற்றை வெளிக்கொண்டு வாருங்கள்.
 * தனிமை அதிகம் இருக்கும்போது, திடீரென்று புதிதாக ஏதாவது முயல்வீர்கள். அதில் ஈர்ப்பு வளர ஆரம்பிக்கும்.
 * உங்களுக்குப் பிடித்த சமூகசேவை எதிலாவது ஈடுபட்டால், மனம் நம்மைப்பற்றி நினைக்காது. பிறரைப் பற்றித்தான் நினைக்க, யோசிக்க வைக்கும்.
 
 You are fine. Loneliness is an attitude of mind. உங்கள் அறிவுக் கூர்மை உங்கள் தனிமையைப் போக்க உதவும்.
 
 வாழ்த்துக்கள்
 
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |