|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| நான் சொன்ன கதையை தன் தங்கைகளுக்கு
 சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு
 தெரிந்திருக்க வாய்ப்பில்லை
 தான் சொல்லும் புதிய கதை ஒன்றை
 ஆவலுடன்
 தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
 என்பது!
 
 *****
 
 முதல் ஊதியம்
 
 இந்தாங்ப்பா
 என்றேன்!
 அம்மாகிட்ட
 குடுப்பா என்றார்!
 உவப்பு
 இரட்டிப்பானது
 அம்மா
 அப்பா
 நான்
 எல்லாருக்கும்!
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| அவள் 
 நீ நல்லாயிருக்கியா
 எனக் கேட்டேன்?
 நீ எப்பிடியிருக்கே
 என்றாள் அவள்.
 நான் நல்லா இருக்கேன்
 என்றதும் துளிர்ப் புன்னகை!
 நலமாய் இராதவள்
 நலமானதைப் போல!
 
 பழமைபேசி,
 சென்டர்வில், டென்னசி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |