| BATM: சித்திரைத் திருவிழா TNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்
 டாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
 அரங்கேற்றம்: சமீஹிதா மோஹன்
 டாலஸ்: தமிழ் இசை விழா
 விருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா
 விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா
 லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா
 சான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா
 பரதநாட்டியம்: அபூர்வா பரந்தாமன்
 பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு |    |  
	                                                        | - ![]() | ![]() மே 2014 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஏப்ரல் 19, 2014 அன்று பாரதி தமிழ் சங்கம் தமிழ் புத்தாண்டு விழாவை மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் நடத்தியது. சங்கத்தின் செயலாளர் T.S. ராம் வரவேற்றார். இப்பகுதியில் பிரபலமான 'சங்கமம்' குழுவினரின் இசையமைப்பு மற்றும் பாடலில் சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திரு. வெங்கடேஷ் ஒருங்கிணைத்தார். பிரபல தமிழ் திரையிசைப் பின்னணிப் பாடகி ஸ்ரீ மதுமிதா பங்கேற்றுப் பாடினார். அவருடன் இணைந்தும், தனியாகவும் வெங்கடேஷ் விஸ்வநாதன், ஈஷ்வர் ஐயர், சவுந்தர்யா, ராகவ் ரவிச்சந்திரன், ஷ்ரேயா ஸ்ரீநிவாசன் ஏராளமான பாடல்களைப் பாடினார்கள். கவுஷிக் ஸ்ரீநிவாசன், அர்ஜுன் ஜெயராமன் கீ போர்டு வாசித்தார்கள். சேஷாத்ரி வெங்கட்ராமன், ஜேம்ஸ் ப்ரசாத் கிதார் வாசித்தார்கள். கோவிந்த் தட்டை, சித்தார்த், ராகவ் ரவிச்சந்திரன் ஆகியோர் டிரம்ஸ் வாசித்தனர். ஷங்கர் ரகு தபலாவும், கோவிந்து மிருதங்கமும் வாசித்தனர். சுந்தர் ஸ்ரீதரன் வயலின் வாசித்தார். 
 அடுத்து, எஸ்விசிசி கோவில் அர்ச்சகர் உமா ஷங்கர் தீட்சித் மற்றும் ராஜராஜேஸ்வரி கோவில் அர்ச்சகர் கிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர் ஜய வருடப் பஞ்சாங்கத்தை வாசித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பாரதி தமிழ்ச் சங்கத்தின் 2014-16 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது வெளிச்செல்லும் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா வரவேற்றார். அவர்களைப் புதிய தலைவர் வேணு ரெங்கநாதன் அறிமுகப் படுத்தி வைத்தார்.
 | 
											
												|  | 
											
											
												| தாரிணி, ஹரிப்ரியா சுந்தரேஷ், சுந்தரி, பூர்ணிமா சண்முகம், ஹேமமாலினி, சுகி சிவா, ப்ரீத்தி ரகுநாத் ஆகியோர் வடிவமைத்த ஆடல் பாடல், வயலின் நிகழ்ச்சிகளும் நிருத்யோலாசா பள்ளி மாணவிகள், ஜனனி ஜெயகுமாரின் மாணவிகள், நித்யா அருண் மற்றும் அவர் மாணவிகள் கலந்துகொண்ட பரதமும், கர்நாடக இசையும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா வசனம் கூற, பார்வையாளர்கள் அதைப் பேசி நடித்தனர். பங்கேற்ற குழந்தைகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் வேணு ரங்கநாதன் நன்றியுரை வழங்கினார். 
 மேலதிகத் தகவல்களுக்கு
 தொலைபேசி - 925.307.6774
 மின்னஞ்சல் - batsvolunteers@gmail.com
 வலைமனை - www.Bharatitamilsangam.org
 முகநூல் - fb/bharatitamilsangam
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 BATM: சித்திரைத் திருவிழா
 TNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்
 டாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
 அரங்கேற்றம்: சமீஹிதா மோஹன்
 டாலஸ்: தமிழ் இசை விழா
 விருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா
 விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா
 லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா
 சான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா
 பரதநாட்டியம்: அபூர்வா பரந்தாமன்
 பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |