|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஊருக்குப் போயிருப்பவள் ஆர்வத்துடன் சொல்கிறாள்!
 அப்பா,
 தாத்தா உங்களைப்பற்றி
 நிறைய கதைகள்
 சொல்லியிருக்கிறார்
 அங்கு வந்ததும்
 சொல்கிறேன் எல்லாமும்!
 
 இனிதான் அறிந்து
 கொள்ளப் போகிறேன்
 என்னைப் பற்றி!
 
 *****
 
 நேசமிகு விசாரிப்பு!
 ஊரிலிருந்து வினவினாள்
 அப்பா,
 சீமா ஆன்ட்டி வீட்டு
 செல்லக்குட்டி நல்லாயிருக்கா?
 போய்ச் சொன்னதும்
 பெருமகிழ்ச்சியும் சிரிப்பும்
 அண்டை வீட்டு சீமாவுக்கு!
 பாவம் அந்த நாய்,
 பார்த்துக் கொண்டு
 ஓரமாய் நிற்கிறது
 தனக்கான அன்பு விசாரிப்பு
 பறிபோனது தெரியாமல்....
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| ஏரிக்கரையில்!! பெருநடையின்
 வேகம் கூடிய தருணமது!
 எதிர்த்திசையில் வந்தவள்
 எவ்வித எதிர்பார்ப்புமின்றி
 சட்டென சிந்திச் சென்றது
 என்னுடனேயே இருந்துவிட
 அப்பசுஞ் சிரிப்பினைத்தான்
 பரப்பிக் கொண்டிருக்கிறேன்
 இதன் வாயிலாக உங்களுக்கும்!!
 
 பழமைபேசி,
 காலியர்வில், டென்னஸி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |