| சாலமன் பாப்பையா தலைமையில் 'வாங்க பழகலாம்' அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
 BTS: 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| அக்ஷயா ட்ரஸ்ட் நாராயணன் கிருஷ்ணனைப் பற்றி தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவரைப் பற்றிய கட்டுரை தென்றல் ஜனவரி, 2010 இதழில் வெளியாகியுள்ளது. ஆதரவற்றோரைப் பராமரிக்க மதுரை சோழவந்தான் அருகே அக்ஷயா ட்ரஸ்ட் 2.6 ஏக்கர் நிலத்தில் ஒரு சேவை இல்லம் கட்டி வருகிறது. தற்போது அந்தக் கனவு மெய்ப்படும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அளித்த தொகையைக் கொண்டு ஆதரவற்ற மனநோயாளிகளுக்கான இல்லம் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 300 முதல் 400 நோயாளிகள்வரை இதில் தங்கலாம். மே மாதம் 9ம் நாள் அன்று இது திறக்கப்பட்ட உள்ளது. 
 நோயாளிகளுக்கான அனைத்து மருத்துவ வசதிகளும் அங்கேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொருவரையும் தேடித்தேடிப் போய் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய இல்லத்தில் நவீன சுகாதார சமையற்கூடம் இருப்பதால், மூன்று வேளையும் சூடான உணவு வழங்கப்படும். அவர்களைச் சமூகம் மெச்சும் இயல்பான மனிதர்களாக்குவதும், புது வாழ்வு அளிப்பதும் அக்ஷயா ட்ரஸ்ட்டின் கனவு.
 
 மதுரை மட்டுமல்லாது பிற இடங்களில் வசிக்கும் மனநலமற்றோரையும் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கத் திட்டங்கள் உள்ளன. பிற இடங்களிலிருந்து நோயாளிகளை இல்லத்திற்குக் கொண்டு வந்து சேர்க்க உதவியாக நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த ஓர் இசைக்குழு ஆம்புலன்ஸ் தந்துள்ளது. நோயாளிகளுக்குச் சேவை செய்யும் தன்னார்வலர்கள் தங்கவும் தனிக் கட்டடம் கட்ட வேண்டியுள்ளது. அதற்கு நிதி திரட்ட “தீம்தனனா இசைக்குழு” அக்ஷயாவுடன் சேர்ந்து வாஷிங்டன் பகுதியில் ஜூன் 16 அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ் மற்றும் சினிமா பின்னணிப் பாடகி சாருலதா மணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதைப் பற்றிய விவரங்களுக்கு 443-995-2657 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். அல்லது iambalu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
 | 
											
												|  | 
											
											
												| பணிகளுக்காக மேலும் நிதி திரட்ட வேண்டி ஒய்.ஜி.மகேந்திராவின் Venkata3 நாடகம் அரங்கேற உள்ளது. 
 அக்ஷயாவிற்கு  உதவ விரும்புவோர் www.akshayausa.com என்ற தளத்திற்குச் செல்லவும். நிதி உதவி அளிக்க விரும்புவோர் வலைத்தளத்தின் மூலமோ அல்லது Akashya USA என்ற பெயருக்கு காசோலை மூலம் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: Akashya USA, 17359, East Caley Place Aurora, CO 800 16.
 மின்னஞ்சல்: iambalu@gmail.com
 
 பாலாஜி ஸ்ரீனிவாசன்,
 வாஷிங்டன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சாலமன் பாப்பையா தலைமையில் 'வாங்க பழகலாம்'
 அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
 BTS: 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |