அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு சிகாகோ: வறியோர்க்கு உணவு நாட்யா: 'சீதா ராம்' நாட்டிய நாடகம்
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | நாடகம்: கிரகப்பிரவேசம் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - விஷி ராமன் | டிசம்பர் 2012 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
	  | 
											
												ஹூஸ்டன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் தனது 28வது படைப்பாக 'கிரகப் பிரவேசம்' என்ற தமிழ் நாடகத்தை மேடையேற்றுகிறது. ஹூஸ்டன் மீனாட்சி தேவஸ்தானம் விநாயகர் ஆலய புனருத்தாரணம் செய்வதற்கான நிதியைத் திரட்டுமுகமாக மீனாட்சி திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் டிசம்பர் 2 அன்று மாலை நான்கு மணிக்கு அரங்கேறும்.
  நகைச்சுவையும் சமூக அக்கறையும் கூடிய குடும்பச் சித்திரங்களை மேடையேற்றி வந்த மீனாட்சி தியேட்டர்ஸ், 'கிரகப் பிரவேசம்' மூலமாக சயன்ஸ் ஃபிக்ஷனில் (sci-fi) கால் வைக்கிறது. 'சில மாற்றங்கள்' குறுந்தொடர் மூலமாகத் தென்றல் வாசகர்களுக்கு அறிமுகமான சந்திரமெளலி, நாடகத்தின் கதை, வசனம் எழுதியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனம் கவர்ந்த 'நடிக ரத்தினம்' டாக்டர் கே. சாரநாதன் இயக்கியுள்ளார். '3 Idiots', 'சென்னைத் தாண்டி வருவாயா?' போன்ற நாடகங்கள் மூலம் பாராட்டுக்களைக் குவித்த சாரநாதன், சந்திரமெளலி கூட்டணியின் மூன்றாவது படைப்பு இந்நாடகம்.
  டிரையாங்குலம் கேலக்ஸி மாரியஸ் கிரகத்தின் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி இழந்து வருவதால் அந்தக் கிரகவாசிகள் தாம் வாழ்வதற்கேற்ற இன்னொரு கிரகமாக பூமியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கிருக்கும் உயிர்களையெல்லாம் அழித்து, பூமியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் ஒரு மாரியஸ் கிரகவாசி பூமிக்கு வருகிறான். அவன் வரும் விண்கலம் பூமி அழிவதற்கு 30 நாள் முன்னதாகத் தரை இறங்குகிறது. அந்த 30 நாளுக்குள் பூவுலக மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாகிறான். இந்த பலஹீனமான மனித ஜந்துக்கள் எப்படி இந்த பூமியிலே இவ்வளவு வருஷம் வாழ்ந்திருக்கிறார்கள் என அறிய முற்படுகிறான். அவனுடைய நோக்கத்தை அறியாத ஏகாம்பரம் என்ற சாமான்யர் அவனுக்கு அடைக்கலம் தருகிறார். இதன் நடுவில், இந்த வேற்று கிரகவாசியின் அழிவு நோக்கத்தைத் தடுக்க FBIயிலிருந்து ராஜேஷும், NASAவிலிருந்து ப்ரியாவும் முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள்.
  வேற்று கிரகவாசியால் பூமியை அழிக்க முடிந்ததா? அந்த 30 நாட்களில் இந்த மனிதர்களைப் பற்றி அவன் அறிந்து கொண்டதென்ன? என்பவற்றை சஸ்பென்ஸ், நகைச்சுவை, தத்துவம் கலந்து வழங்க இருக்கிறார்கள். | 
											
											
												| 
 | 
											
											
											
												மேலும் விவரங்களுக்கும், அனுமதிச் சீட்டுகளுக்கும்  www.emeenakshi.org www.meenakshitheaters.com
  விஷி ராமன், ஹூஸ்டன் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு சிகாகோ: வறியோர்க்கு உணவு நாட்யா: 'சீதா ராம்' நாட்டிய நாடகம்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |