| வண்ண வண்ணப் பூரிகள் சிவந்த பூரி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் பிஞ்சு சுரைக்காய்  - 1
 சௌசௌ         - 1
 கேரட்             - 2
 வெங்காயம்       - 2
 மிளகாய்          - 6
 இஞ்சி             - 1 துண்டு
 உப்பு              - தேவையான அளவு
 கடலைமாவு      - 2 கப்
 அரிசிமாவு        - 2 கப்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 மிளகாய்த்தூள்    - 1 தேக்கரண்டி
 கொத்துமல்லி, கறிவேப்பிலை
 
 செய்முறை:
 சுரைக்காய், சௌசௌ, கேரட் கழுவித் தோல்சீவி துருவிக்கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துச் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, மிளகாய், துருவிய காய்கறிகள் போட்டு வதக்கவும். நீர் வற்றி வெந்ததும், சிறிது அரிசிமாவைத் தூவி இறக்கவும். ஆறியதும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். உருண்டைகளை இந்த மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு, சிவக்க வந்ததும் எடுக்கவும், தீயை மெலிதாக வைக்கவும். தக்காளி சாஸுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும். தயிரில் சிறிது உப்பு, சீரகம், கொத்துமல்லித் தழை போட்டு, இதில் இந்த உருண்டைகளை ஊற வைத்துச் சாப்பிடலாம்.
 | 
											
												|  | 
											
											
												| பாப்பா நல்லபெருமாள் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வண்ண வண்ணப் பூரிகள்
 சிவந்த பூரி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |