| ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள் நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
 அரோரா பாலாஜி கோவில் பிரம்மோத்சவம்
 ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
 நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
 மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம்
 மேக்னா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
 திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
 பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
 நகரத்தார் கூட்டமைப்பு விழா
 சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் ஆன்மீகப் பயணம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தமிழ்நாடு அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம் |    |  
	                                                        | - உமையாள் முத்து ![]() | ![]() செப்டம்பர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஜூன் 24, 2011 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் பொதுக்குழுக் கூட்டம் 'கார்னிவல் குளோரி' சொகுசுக் கப்பலில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பிரிவில் பணியாற்றும் மூன்று அறங்காவலர்கள் இதில் பங்கேற்றனர். அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்நாடு அறக்கட்டளை 1974 முதல் அறுநூறுக்கும் மேற்பட்ட கல்வி, நலவாழ்வு, சுகாதாரம், பெண்களின் மேம்பாடு ஊரக வளர்ச்சி தொடர்பான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராம்மோஹன், இரண்டாண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வுபெறும் இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்தார். வரும் இரண்டாண்டுகளுக்கு டாக்டர் தெய்வநாயகம் தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவராகவும், அறவாழி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹூஸ்டனில் 2012ம் ஆண்டு மெமோரியல் விடுமுறை நாட்களாம் மே 25-28ல் தமிழ்நாடு அறக்கட்டளை விழா நடைபெற இருக்கிறது. ஹூஸ்டன் டாக்டர் பத்மினி, சாம் கண்ணப்பன் இருவரும் அதற்கான ஏற்பாடுகளை டெக்ஸஸ் நகர் குழுவினருடன் இணைந்து செய்து வருகின்றனர். 
 பொதுக்குழுக் கூட்டம் தவிர பாரம்பரிய, மேற்கத்திய நடனங்கள், இசைப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை கலாட்டாக்கள், விளையாட்டுக்களும் இடம்பெற்றன. அமெரிக்கா வாழ் இந்தியக் குழந்தைகள் கலாசார வேறுபாடுகளால் பெற்றோர்களிடமிருந்து பெறுவது ஆதரவா, அல்லவா? என்ற தலைப்பில் உமையாள் முத்து தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. சாம் கண்ணப்பன், சோமலெ சோமசுந்தரம் இருவரும் தலைப்பை ஒட்டியும், பிரஹா ஸித்த குப்தா, சுந்தரி விஸ்வநாதன் இருவரும் தலைப்பை வெட்டியும் பேசினர்.
 
 தமிழ்நாடு அறக்கட்டளையின் உறுப்பினராகச் சேர: கஸ்தூரி கோம்ஸ் - 065-451-0440.
 | 
											
												|  | 
											
											
												| ஹூஸ்டனில் நடைபெற இருக்கும் TNF 2012 விழா விபரங்களுக்கு: samkannappan@gmail.com, padminiprn198@aol.com 
 இணையதளம்: www.enfusa.org
 
 செய்திக்குறிப்பிலிருந்து,
 மொழிபெயர்ப்பு: உமையாள் முத்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள்
 நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
 அரோரா பாலாஜி கோவில் பிரம்மோத்சவம்
 ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
 நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
 மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம்
 மேக்னா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
 திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
 பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
 நகரத்தார் கூட்டமைப்பு விழா
 சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் ஆன்மீகப் பயணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |