| ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள் நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
 ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
 நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
 மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம்
 மேக்னா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
 திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
 பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
 நகரத்தார் கூட்டமைப்பு விழா
 தமிழ்நாடு அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம்
 சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் ஆன்மீகப் பயணம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அரோரா பாலாஜி கோவில் பிரம்மோத்சவம் |    |  
	                                                        | - ![]() | ![]() செப்டம்பர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஆகஸ்ட் 13, 2011 அன்று அரோரா ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி) கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு உள்ளூர் நடனப் பள்ளிகளும் பிற கலைக்குழுக்களும் பங்கேற்ற சிறப்பான கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. 
 லாஸ்யம் நடனப்பள்ளியின் குரு ஹேமா யடனபுடி அவர்களின் மாணவர்கள் வழங்கிய 'லிங்காஷ்டகம்' குச்சிபுடி நடனம், குரு விஜயலட்சுமி ஷெட்டியின் நடராஜ் நடன அகாடமி வழங்கிய 'நிருத்ய வந்தனம்' ஆகியவை வெகு அழகு. குச்சிபுடி நாட்ய விஹாரின் ஷோபா தம்மனாவும், ஆனந்தா டான்ஸ் தியேடரின் ஜானகி ஆனந்தவல்லி நாயரும் இணைந்து 'மரகத மணிமய சேலா' என்ற அற்புதமான தரங்கம் ஒன்றை குரு சமர்ப்பணமாக வழங்கினர்.
 
 நிகழ்ச்சியின் மகுடமாக ஒளிர்ந்தது, சுனதா என்ற பார்வையற்றோர் குழுவினர் வழங்கிய பிரமிக்க வைத்த 'தீபாஞ்சலி' நிகழ்ச்சி. தமது கைகளில் தீபங்களை ஏந்தியபடி மாறி மாறி அணிகள் வகுத்தது நம்பற்கரியதாக இருந்தது. 'மோஹினி பஸ்மாசுரன்' என்ற குச்சிபுடி நாட்டிய நடனத்தை விசாகப்பட்டினத்தின் 'குச்சிபுடி கலாக்ஷேத்ரா' பள்ளியின் குரு ஹரி ராம மூர்த்தி வடிவமைத்து வழங்கினார். ஹரி ராம மூர்த்தி தாமே பஸ்மாசுரனின் வேடம் தாங்கி மிகவும் நேர்த்தியாக ஆடினார். மோஹினியாக நடனமாடிய சந்தியாஸ்ரீ ஆத்மகுரியின் தோற்றமும் நடனமும் பஸ்மாசுரனை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் வசீகரித்ததில் ஆச்சரியமில்லை.
 | 
											
												|  | 
											
											
												| சரோஜா ரவி நிகழ்ச்சிகளைச் சுவைபடத் தொகுத்தளித்தார். ஸ்ரீ பாலாஜி கோவிலின் தலைவர் டாக்டர். ராமராஜா பி. யலவர்த்தி கலைஞர்களைக் கௌரவித்தார். 
 செய்திக்குறிப்பிலிருந்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள்
 நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
 ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
 நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
 மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம்
 மேக்னா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
 திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
 பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
 நகரத்தார் கூட்டமைப்பு விழா
 தமிழ்நாடு அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம்
 சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் ஆன்மீகப் பயணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |