|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜூன் 2011: வாசகர் கடிதம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூன் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												| சாரநாதன் நேர்காணல் அற்புதம். நல்ல கேள்விகள், இதயத்திலிருந்து வந்த பதில்கள். 
 விஜயா ராமச்சந்திரன் (தமிழ் ஆன்லைனில்)
 
 *
 
 குறுக்கெழுத்துப் புதிர் பார்த்தேன். தமிழ்ச் சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளச் சீரிய முயற்சி. பாராட்டுகள்.
 
 ராமன் ராமானுஜன் (தமிழ் ஆன்லைனில்)
 | 
											
												|  | 
											
											
												| ஸ்ரீ சத்ய சாயி பாபா பற்றிய மனதை உருக்கும் கட்டுரையைப் படித்தேன். உலகில் தோன்றிய அவதார புருஷர்களில் அவரும் ஒருவர். அவர் ஒருவரே ஏற்றுச் செய்திருக்கும் நற்பணிகளைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. உலக அளவில் அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர் செய்திருக்கும் தன்னலமில்லாத தொண்டுதான் காரணம். இலவச மருத்துவத்திற்கு, இலவசக் கல்விக்கு, தான தர்மத்துக்கு என்று கணக்கில்லாத நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அவரிடம் இருந்த தெய்வீக  சக்தி மற்றும் சுயநலம் இல்லாத மனதுதான் காரணம். விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், இசை மேதைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாமர மக்கள் எல்லாரும் பாபாவின் அருளுக்காகப் புட்டபர்த்தி செல்வார்கள். 
 பிராந்தியன்கரை ராமபத்ரன் (மின்னஞ்சலில்)
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |