| தெரியுமா?: அனாமிகா வீரமணி தெரியுமா?: மைதிலி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 தெரியுமா?: அமெரிக்காவைக் கலக்கிய லக்ஷ்மன் ஸ்ருதி
 தெரியுமா?: தேசீய அறிவியல் கழகத் தலைவராகப் பேரா. சுப்ரா சுரேஷ்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெரியுமா?: கலிஃபோர்னியா மாநில வழக்கறிஞர் ஆவாரா கமலா ஹாரிஸ்? |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞரான திருமதி. கமலா ஹாரிஸ் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்பது தெரிந்திருக்கலாம். அவரது பார்வை மாநிலச் சட்ட வழக்கறிஞராவதில் விழுந்திருக்கிறது. அதற்கான முதல்கட்டத் தேர்தல் ஜூன் 8, 2010ல் நடந்தபோது 33 சதவீத வாக்குகளைப் பெற்று 6 போட்டியாளர்களிடையே வெற்றியடைந்துள்ளார். அடுத்து வந்த கிறிஸ் கெல்லி 18.5 சதவீதம் வாக்குகளே பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது. 
 இறுதிச் சுற்றில் இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்டீவ் கூலி என்பவரை எதிர்கொள்வார். லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் மாவட்ட வழக்கறிஞராவார் ஸ்டீவ் கூலி. இதில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் (Attorney General) பதவியை வகிக்கும் முதல் பெண்மணி, முதல் ஆசியர், முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்னும் சிறப்புகளைப் பெறுவார்.
 | 
											
												|  | 
											
											
												| கமலா ஹாரிஸ் நாம் முன்னர் நேர்காணல் செய்துள்ள (பார்க்க: தென்றல், ஃபிப்ரவரி 2004) திருமதி. சியாமளா ஹாரிஸ் அவர்களின் மகள் ஆவார். | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெரியுமா?: அனாமிகா வீரமணி
 தெரியுமா?: மைதிலி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 தெரியுமா?: அமெரிக்காவைக் கலக்கிய லக்ஷ்மன் ஸ்ருதி
 தெரியுமா?: தேசீய அறிவியல் கழகத் தலைவராகப் பேரா. சுப்ரா சுரேஷ்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |