விஷாலுக்குத் 'திமிரு' சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி! 'வைத்தீஸ்வரன்' சரத்குமார் 'காசு இருக்கணும்'
|
 |
| புதிய தோற்றத்தில் கார்த்திக்! |
   |
- கேடிஸ்ரீ | ஏப்ரல் 2006 |![]() |
|
|
|
|
அரசியல் கட்சித் தலைவராக புதுப் பாத்திரம் கண்ட நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வளர்ந்து வருகிறது 'ஈசா'. ஜி. பிலிம் மேக்கர்ஸ் தயாரித்து வழங்கும் இப்படத்திற்காக கார்த்திக் தன்னுடைய உடையலங்காரம், நடை, பாவனைகளை மாற்றி வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் கஸ்தூரிராஜா மற்றும் கே. செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வால்மீகி இப்படத்தை இயக்குகிறார். படத்தில் செந்தில், வடிவேல் மற்றும் புதுமுகங்கள் பலரும் நடிக்கின்றனர்.
பழனிபாரதி, நா. முத்துக்குமார், சினேகன் ஆகியோரின் பாடல்களுக்கு கவின் சாரதா என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.
படத்தில் வரும் இரண்டு பாடல்களுக்கு முன்னணிக் கதாநாயகிகள் இருவர் நடனமாட இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான தகவல். |
|
|
முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது கட்டம் தென்தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கேடிஸ்ரீ |
|
 |
More
விஷாலுக்குத் 'திமிரு' சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி! 'வைத்தீஸ்வரன்' சரத்குமார் 'காசு இருக்கணும்'
|
 |
|
|
|
|
|
|
|
|