| கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி கொண்டாட்டம் பேரா. இளங்கோ இலக்கிய உரை
 சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
 'ஆஷா நிகேதனின் நண்பர்கள்' நிதி திரட்டும் விருந்து
 டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
 மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
 வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சிகாகோவில் தேனிசை மழை |    |  
	                                                        | - கலை சோமு ![]() | ![]() நவம்பர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  அக்டோபர் 11, 2009 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர் லெமாண்ட்  திருக்கோவிலில் 'தேனிசை மழை' விழாவைச் சிறப்பாக நடத்தினர். 
 சங்க நிர்வாகி சோமு வரவேற்புரை வழங்கினார். ஐங்கரன், ரமா, பவித்ரா மற்றும் ரவிசங்கர் ஆகியோரின் பாடல்களால் உற்சாகமாகியது. மினு பாடிய 'பழம் நீயப்பா', அரவிந்த் பாடிய 'ஒரு நாள் போதுமா' பாடல்கள் கே.பி. சுந்தரம்பாள், பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரைக் கண்முன் கொண்டு வந்தன. இவற்றுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கரவோசை செய்தது பழைய பாடல்களின் கருத்தும் சிறப்பும் இன்னும் குறையவில்லை என்பதனை நினைவூட்டின.
 
 பிரஷாந்த், ஸ்வேதா பாடிய 'எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி', 'டாடி மம்மி வீட்டில் இல்ல', 'ஓ திவ்யா', மற்றும் பவித்ரா பாடிய 'அல்லேக்ரா', 'மியாவ் மியாவ் பூனை' பாடல்கள் இளைய சமூகத்தினரை இழுத்து வந்து ஆடச்செய்தன. ஐங்கரன், ரமா பாடிய 'தாமரைக் கன்னங்கள்' எனும் பழைய பாடல் புதுப் பாடலுடன் போட்டி போட்டது. ரசிகர்கள் எல்லாப் பாடல்களையும் 'ஒன்ஸ் மோர்' கேட்டது தலைவர் ரகுராமன் மற்றும் செயற்குழு நிர்வாகிகளை நெகிழ்வித்தது.
 | 
											
												|  | 
											
											
												| நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஷோபனா, மயூரி, முத்து, சித்ரா, கணேஷ் மற்றும் பாடகர்கள் கீதா, ஷரண்யா, ரங்கா, விநித்ரா, லாவண்யா, சந்திரகலா, ராம், கார்த்திக், திவ்யா ஆனந்தன், ரவிச்சந்திரன், ஸ்ரீராம், ரம்யா, திவ்யா, டாக்டர் ரோச்  மற்றும் ராம் பிரசாத் அவர்களுக்கும், சீனுவின் இசைக் குழுவினருக்கும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி அறவாழி நன்றி தெரிவித்ததுடன் விழா நிறைவுற்றது. 
 கலை சோமு
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
 பேரா. இளங்கோ இலக்கிய உரை
 சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
 'ஆஷா நிகேதனின் நண்பர்கள்' நிதி திரட்டும் விருந்து
 டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
 மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
 வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |