தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்' லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம் 'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்' | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | நவம்பர் 2009 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 நவம்பர் 5, 2009 அன்று மாலை 4:00 மணிக்கு பெர்க்கலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஸ்டீவன்ஸ் ஹால் அரங்கத்தில் முனைவர் விஜயலட்சுமி ரங்கராஜன் அவர்கள் 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்' என்ற தலைப்பிலான டௌன்செண்ட் சொற்பொழிவை ஆற்றுவார். 
  வேதம் சாரா மதங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய மூன்றும் தமிழ் நாட்டிற்கு எப்பொழுது வந்தன என்று திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. எனினும் இவை தமிழுக்குப் பல நல்ல இலக்கியக் கொடைகளை அளித்துள்ளன. இம்மதத்தினர் தமிழ் மொழியை நன்கு கற்று அம்மொழியிலேயே  இலக்கண இலக்கியங்களை உருவாக்கி, அதன்வழி தம் சமயக்கருத்துக்களைப் பரப்ப முயன்றனர். சமணரும், பௌத்தரும் தமது வினைக் கொள்கையை (theory of karma) நிலைநிறுத்தினர். ஆசீவகர்கள், "ஆருயிர் முறைவழிப்படும்" என்ற ஊழ்க் கொள்கையை  (theory of fate) வலியுறுத்தினர். நாயன்மார்கள், ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தால் நலிவடைந்த இம்மதத்தினர், தம் செல்வாக்கை மீட்டுக்கொள்ளப் பல்வேறு இலக்கிய உத்திகளைக் கையாண்டனர். அவற்றின் விளைவாகவே பெருங்கதை, சீவகசிந்தாமணி போன்ற  காப்பியங்கள். இந்த இலக்கிய,சமூக,சமயப் பின்னணியில் தமிழகத்தில் விளைந்த மொழி, இலக்கிய, பண்பாட்டு மாற்றங்கள் இவ்வுரையில் விரிவாக ஆய்வு செய்யப்படும். | 
											
											
												| 
 | 
											
											
											
												
  | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்' லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம் 'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |