இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | ஏழைப் புற்றுநோயாளிகளுக்கு உதவ கிச்சன் கில்லாடி - 2009 போட்டி | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - உமா ரவி | ஜூலை 2009 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 ஜூலை 25, 2009 அன்று கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் அறக்கட்டளை (CIF-US) ஏற்பாடு செய்துள்ள ‘கிச்சன் கில்லாடி-2009' சமையல் போட்டியின் முதல் சுற்று நடக்கவிருக்கிறது. இதன் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர் தமது வீட்டில் சமைத்துக் கொண்டுவந்த பண்டங்களை நடுவர்கள் சுவைத்து மதிப்பிடுவர். இதில் சுவை, கொடுத்த பொருளைத் திறம்படப் பயன்படுத்துதல், செய்முறைச் சிறப்பு, அலங்காரமாகப் பரிமாறுதல், ஆரோக்யச் சமையல் ஆகிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறும். நடுவர் தரும் மதிப்பெண் 70 சதவீதமும், பார்வையாளர் தரும் மதிப்பெண் 30 சதவீதமும் வெற்றியாளரை நிர்ணயிக்கும். இறுதிச் சுற்றில் பங்குபெறுவோர் அரங்கத்திலேயே தமது கைத்திறனைக் காண்பிக்க வேண்டும்.
  இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1954ல் சென்னையில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இந்த நோய்க்கெதிரான அவரது போராட்டத்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மிகுந்த பொருட்செலவாகும் இந்த நோய்க்கான சிகிச்சையை ஏழைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அடையாறு புற்றுநோய் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. வருடத்திற்கு 125,000 நோயாளிகள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து இங்கே சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கான 423 படுக்கைகளில் 297 இலவச சிகிச்சை பெறுபவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. இதற்கு அரசின் பண உதவி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
  அமெரிக்காவிலுள்ள அமைப்பான Cancer institute Foundation US (CIF-US) நிதி திரட்டும் பொருட்டாக இந்தச் சமையல் போட்டியை நடத்துகிறது. இது அமெரிக்காவாழ் இந்தியரால் லாப நோக்கம் இல்லாத அமைப்பாக செப்டம்பர் 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. கலைவிழா, சமையல் போட்டி போன்றவைகளை நடத்துவதன் மூலமாகப் பெறும் உதவித்தொகை முழுவதும் இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தடுப்புக்காக அடையாறு புற்றுநோய் நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றது. 2007ல் 200,000 டாலர் மதிப்புள்ள டிஜிடல் ரேடியோகிராஃபி இயந்திரம் ஒன்றும், 2008ல் 225,000 டாலர் நிதியும் வழங்கப்பட்டன.
  போட்டியில் வெல்பவர்களுக்குக் கீழ்க்கண்ட பரிசுகள் காத்திருக்கின்றன: முதல் பரிசு: Apple Ipod Touch - 2G  இரண்டாம் பரிசு: KitchenAid 9-cup food processor  மூன்றாம் பரிசு: Delonghi Convection Toaster Oven
  திறமையைக் காட்டுதல், பரிசு பெறுதல் என்பவை தவிர, இயலாதோருக்கு அரிய சமயத்தில் உதவினோம் என்ற மன நிம்மதியும் உங்களுக்குக் கிடைக்கும்.
  கிச்சன் கில்லாடி போட்டியில் பங்குபெற: இணையதளத்தில் பதிவுசெய்ய: www.cifwia.org  தொலைபேசி வழிப் பதிவுசெய்ய: 408.768.0525 நுழைவுக் கட்டணம் இலவசம். | 
											
											
												| 
 | 
											
											
											
												|  உமா ரவி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |