| மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகள் ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
 உதவும் கரங்கள் கலாட்டா-2009
 TAGDV போட்டிகள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெற்காசிய இதய மையம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி |    |  
	                                                        | - ![]() | ![]() மார்ச் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  மார்ச் 14, 2009 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மில்பிடாஸில் அமைந்துள்ள இந்தியக் கலாசார மையத்தில் (ICC) 'சிந்தூர இரவு' (Scarlet Night) ஒன்றை எல் கமீனோ மருத்துவ மனையின் தெற்காசிய இதய மையம் நடத்த உள்ளது. இந்தியா, இலங்கை, பங்களாதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாட்டு வம்சாவளியினருக்கு இதய நோய் தாக்கும் அபாயம் நான்கு மடங்கு அதிகமுள்ள காரணத்தால், அவர்களிடையே அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி முனைகிறது. 
 டப்ளினில் (கலி.) உள்ள தி ஹெரிடேஜ் புடீக் (www.heritageboutiqueinc.com) ஒரு கண்கவரும் சிந்தூர ஆடையலங்கார அணிவகுப்பை பிரகாஷ் வாஸ்வானி தொகுத்தளிக்க நடத்தும். அதையடுத்து அனுபமா சந்திராத்ரேயா பாலிவுட் மற்றும் ஹிந்துஸ்தானி மெல்லிசைப் பாடல்களைப் பாடுவார். யூசி பெர்க்கலியின் 'தில் சே ஏ கெபல்லா' இசைக்குழுவும் 'தத்வா' நடனக்குழுவும் பார்வையாளர்களுக்கு மேலும் விருந்தளிக்கும். அன்றைய விருந்தில் தெற்காசிய உணவுவகைகள் இதய ஆரோக்கியத்துக்கு ஏற்ற பக்குவத்தில் பரிமாறப்படும்.
 
 தெற்காசியர்கள் சிறிய வயதிலேயே எந்த அறிகுறிகளும் இல்லாமல் இதய நோய்களுக்கு ஆளாகிறார்கள். 2010ஆம் ஆண்டு வருகையில் ஏறத்தாழ உலகின் 60 சதவீத இதய நோய்க்கு இவர்கள் இரையாகியிருப்பார்கள் என்கிறார் மையத்தின் மருத்துவ இயக்குனரான டாக்டர் சீஸர் மோலினா. "அப்படியாகும் வரை விடக் கூடாது. இப்போதே நாம் செயல்பட வேண்டும்" என்கிறார் இவர்.
 
 தெற்காசிய இதய மையம் ஒரு லாப நோக்கற்ற, தெற்காசிய மக்களிடையே இதய நோய்ப் பரவலுக்கு எதிராகச் செயல்படும் ஓர் அமைப்பு. முன்கூட்டியே பரிசோதித்தல், அறிவூட்டல், வாழ்க்கை முறையில் மாற்றம், இதய நலக் கல்வி ஆகியவை மூலமாக ரத்தநாள நோய்ப் பரவலைத் தடுக்கச் செயல்படும் ஓர் அமைப்பாகும்.
 
 இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும் நோய் மேற்கண்ட முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும். மேலும் தகவலுக்கு: www.southasianheartcenter.org
 | 
											
												|  | 
											
											
												| ஜயா பத்மநாபன் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகள்
 ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
 உதவும் கரங்கள் கலாட்டா-2009
 TAGDV போட்டிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |