| கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
 மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
 அட்லாண்டா தமிழ் தேவாலயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
 நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  ஜனவரி 20, 2008 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழாவை சான் ஹோசே நகரின் செஞ்சுரி பேரியேசா திரையரங்கத்தில் கொண்டாடியது. இந்த ஆண்டுக்கும் புதிய செயற்குழுவுக்கும் இது முதல் விழா. 
 முதலில் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து Dr. பத்மா ராஜகோபால் தமிழிசை நிகழ்ச்சியில் மகாகவி பாரதியார் பாடல்களுடன் பல நாட்டுப்புறப் பாடல்களையும் பாடினார். இவர் இசைக்கலைஞர் D.K. ஜெயராமனின் மாணவி ஆவார்.
 
 அடுத்து 'US மாப்பிள்ளை' என்கிற நகைச்சுவை நாடகத்தை 'கலாட்டா நண்பர்கள்' குழுவினர் மேடையேற்றினர். இக்குழுவின் இளைஞர்கள் அனைவரும் மன்றத்துக்குப் புதியவர்கள். இவர்களது நகைச்சுவை விருந்தைத் தொடர்ந்து குணா மற்றும் G.K. இணைந்து தமிழ்த் திரைப் பாடல்களை வழங்கினர். பின்பு அருண் தனது பலகுரல் திறமையினால் அரங்கத்தினரை வியப்பில் ஆழ்த்தினார்.
 | 
											
												|  | 
											
											
												| அரங்கத்தினர் அனைவருக்கும் பொங்கல் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர், மாதவன் மற்றும் பாவனா நடித்த சீமானின் 'வாழ்த்துக்கள்' திரைப்படம் ஒளிபரப்பப் பட்டது. 
 தமிழ் மன்றம் வலைத்தளம்: http://www.bayareatamilmanram.org
 
 தில்லை குமரன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
 அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
 மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
 அட்லாண்டா தமிழ் தேவாலயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
 நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |