குடைமிளகாய் தயாரிப்புகள் குடைமிளகாய் பருப்பு உசிலி குடைமிளகாய் ரசவாங்கி குடைமிளகாய் மோர்க்கூட்டு குடைமிளகாய் துவையல் குடைமிளகாய் பொரியல் குடைமிளகாய் அடைத்த (ஸ்டஃப்டு) பொரியல் குடைமிளகாய் பக்கோடா
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												குங்குமப் பூவைப் பாலில் ஊற வைத்துக் கரைப்பதற்கு பதில் அதை நுண்ணலை (மைக்ரோவேவ்) அவனுக்குள் பாத்திரத்தில் போட்டுப் பத்து நொடி கொதிக்க வைத்தால் சுலபமாகப் பொடியாகி பாயசத்தில் கலந்து விடும்.
 
  வெந்த பாலக் கீரையை அடைமாவில் கலந்து அடை வார்த்தால் அடை பிரமாதமாக இருக்கும்.
 
  வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாக மிக்சியில் உடைத்து வைத்துக் கொண்டு கூட்டு, கறி, சாலடில் போட்டால் ருசியாக இருக்கும். சத்தானதும்கூட. 
 
  ரவை, வேர்க்கடலை ஆகியவற்றை நுண்ணலையில் வறுக்கவும்.
 
  கொத்துமல்லியைச் சுத்தம் செய்து, தண்ணீரில்லாமல் கிச்சன் பேப்பரில் சுற்றி பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்தால் இரண்டு வாரங்கள்கூட வாடாமல் இருக்கும். 
 
  எள்ளை வறுத்துப் பொடி செய்து வைத்து கொண்டு காரக் காய்கறிகளில் கடைசியில் தூவி இறக்கினால் ருசியாக இருக்கும். சத்தும் அதிகம்.
 
  புளி, மிளகு, சீரகம், துவரம் பருப்புப் பொடி போட்ட ரசத்தில் துளி வெல்லம் போட்டால் ரசம் வாசனையாகயும், ருசியாகவும் இருக்கும். | 
											
											
												| 
 | 
											
											
											
												| சரோஜா வெங்கடசுப்ரமண்யன் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  குடைமிளகாய் தயாரிப்புகள் குடைமிளகாய் பருப்பு உசிலி குடைமிளகாய் ரசவாங்கி குடைமிளகாய் மோர்க்கூட்டு குடைமிளகாய் துவையல் குடைமிளகாய் பொரியல் குடைமிளகாய் அடைத்த (ஸ்டஃப்டு) பொரியல் குடைமிளகாய் பக்கோடா
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |