| கொழுக்கட்டை தேங்காய்ப் பூரணம்
 கடலைப் பருப்பு பூரணம்
 எள் பூரணம்
 உளுந்துப் பூரணம் - காரம்
 மைதா அல்வா
 மைதா மாவு முறுக்கு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பால் கொழுக்கட்டை (அல்லது) பாகு கொழுக்கட்டை |    |  
	                                                        | - நளாயினி ![]() | ![]() ஆகஸ்டு 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| தேவையான பொருட்கள் : 
 பச்சரிசி : 2 ஆழாக்கு
 வெல்லம் - 300 கிராம்
 தேங்காய் - 1
 பால் - 1/4 லிட்டர்
 ஏலக்காய் - 3
 உப்பு - 1 சிட்டிகை
 
 செய்முறை :
 
 பச்சரிசியை நன்றாகக் களைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் மிக்ஸியில் அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாகவும், மை போல நைசாகவும் அரைத்துக் கொள்ளவும்.
 
 தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும். ஏலக்காயையும் பொடி செய்து கொள்ளவும். பாலைக் காய்ச்சி வைக்கவும்.
 
 ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுப் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தைப் போடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதித்து வந்தவுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
 
 ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நான்கு டம்பளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் தீயை மிதமாக வைக்கவும்.
 
 முறுக்குப் பிழியும் அச்சினில் மாவைப் போட்டுக் கொதிக்கும் தண்ணீரில் பிழிந்து விடவும். சிறிது நேரம் கழித்து ஒரு மரக்கரண்டியால் மெதுவாகக் கிளறி விடவும். கொஞ்சம் வெந்து மேலே வந்தடுன் அடுத்த அச்சு மாவைப் பிழியவும்.
 
 மாவு நன்றாக வெந்து இறுகியவுடன் வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, சிட்டிகை உப்பு எல்லாவற்றையும் போட்டு அடி பிடிக்காமல் கிளறி விடவும். வெல்லப்பாகு நன்றாகச் சேர்ந்து வந்தவுடன் இறக்கி வைத்துச் சிறிது நேரம் ஆற விடவும்.
 
 கொஞ்சம் ஆறியவுடன் காய்ச்சி வைத்துள்ள பாலை ஊற்றிக் கிளறி விடவும். (பாகு கொழுக்கட்டை சூடாக இருக்கும்போதே பால் ஊற்றினால் பால் திரிந்து விடும்.)
 
 இந்தப் பாகு கொழுக்கட்டையைக் கொஞ்சம் ஆறிய பின் சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| நளாயினி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கொழுக்கட்டை
 தேங்காய்ப் பூரணம்
 கடலைப் பருப்பு பூரணம்
 எள் பூரணம்
 உளுந்துப் பூரணம் - காரம்
 மைதா அல்வா
 மைதா மாவு முறுக்கு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |