|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| அரசியல்வாதி: மீட்டிங்குல 20 நிமிஷம் பேசறா மாதிரி பேச்சு எழுதிக் கொடு றான்னு சொன்னதுக்கு, என்னத்த எழுதிக் கொடுத்த. ஒரு மணி நேரம் கூட பேசி யிருக்க மாட்டேன், முடிக்கறதுக்குள்ள பாதிபேர் நடுவிலேயே எழுந்து போயிட் டாங்க? 
 தொண்டன்: ஐயா. சரியா 20 நிமிஷத் துக்கு தாங்க எழுதிக்கொடுத்தேன். அதோட கூட இரண்டு பிரதி எக்ஸ்ட்ராவா கொடுத்திருந்தேங்க. கவனிக்கலயா?
 
 ஸ்ரீகோண்டு,
 ப்ரீமாண்ட், கலிபோர்னியா.
 
 *****
 
 பாகவதர்: நான் இன்னிக்கு பாடிய பாட்டுகளில் எது பிடிச்சுருந்தது
 
 ரசிகர்: மங்களம் தான்.
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 
 *****
 
 காதலன்: கண்ணே, ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறாய்? கோபமா?
 
 காதலி: அதெல்லாம் இல்லே... பல்செட்டு எங்கேயோ விழுந்து விட்டது...
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 
 *****
 
 கடி ஜோக்ஸ்
 
 தோழி: ''கல்யாணம் ஆகி உன் மாமியாரை கையோட கூட்டி வெச்சுக்கிட்டயாமே? நல்ல பெண் நீ...''
 
 தோழி: ''அது எல்லாம் ஒண்ணுமில்லே!
 
 எங்க வீட்டுக்காரருக்கு சமைக்க தெரியாது.''
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| ''டாக்டர் என் இருதய ஆபிரேஷனுக்கு சுத்தியலை ஏன் கொண்டு வந்திருக்கீங்க...'' 
 ''உங்களுக்கு கல் நெஞ்சுன்னு சொன்னாங்களே...''
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 
 *****
 
 மானேஜர்: எதுக்கு ஒரு வாரம் லீவு கேட்கறீங்க?
 
 குமாஸ்தா: வீட்டுவேலைக்காரி ஒரு வாரம் லீவ் போடப்போறா...
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 
 *****
 
 மனைவி: எதுக்கு அந்த ஹோட்டலுக்கு இனிமே சாப்பிட போகமாட்டேன்னு சொல்றீங்க?
 
 கணவன்: நான் இனிமே கல் உரல்லே மாவு அரைக்கமுடியாது... 'அல்ட்ரா'தான் வேணும்னு சொல்லிட்டேன்...
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 
 *****
 
 தோழி 1: ஏன் உன் கல்யாணத்திலே ஏமாந்து போயிட்டேன்னு சொல்றே?
 
 தோழி 2:  பின்ன என்ன.. அவரு கல்யாணத்துக்கு முன்னே, நான் ஒரு கண்டக்டர்ன்னு சொன்னது 'கண் டாக்டர்' ன்னு மாதிரி காதிலே விழுந்துச்சு...
 
 *****
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்,
 கலிபோர்னியா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |