புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் உருளை கபாப் புலாவ் கொத்துமல்லி புலாவ் காரட் இனிப்புப் புலாவ் பேரீச்சை இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தேவையான பொருட்கள்
  நிலக்கடலை		-	1/4 கப் எள்ளு		-	1/4 கப் தேங்காய்த் துருவல்	-	1/4 கப் சிகப்பு மிளகாய்	-	4 வெங்காயம்		-	2 பெருங்காயம்	-	சிறிது கடுகு		-	1 தேக்கரண்டி கருவேப்பிலை	-	சிறிதளவு நெய்		-	2 தேக்கரண்டி பாஸ்மதி அரிசி	-	2 கப் ஆரஞ் கலர் பெளடர் (கேசரி பெளடர்)	-	1/2 தேக்கரண்டி | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை
  பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் ஊறவிட்டு வடிய வைக்கவும். வாணலியில் நெய்விட்டு அரிசியைப் போட்டு வறுத்து உப்பு சேர்த்து வேகவிடவும்.
  வேர்கடலை, எள்ளு, சிகப்பு மிளகாய் ஆகியவற்றை வாணலியில் போட்டு நெய் விட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
  தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து பெருங்காயம் பொரித்து எல்லாவற்றையும் துளி உப்பு சேர்த்து பொடி செய்து அரிசி வேகும் போது போடலாம். இல்லாவிட்டால் சாதம் ஆனவுடன் இறக்கி வைத்தும் போடலாம்.
  கடுகு, கருவேப்பிலையை தாளித்து வெங்காயத்தை அதிலேயே போட்டுச் சுருள வதக்கி சாதத்துடன் சேர்த்து கலர்பெளடர் போடவும்.
  மேலாக நெய் சுடவைத்து ஊற்றி கலந்து பரிமாறவும். இது மிகவும் சுவையான புலாவ்.
  தங்கம் ராமசாமி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் உருளை கபாப் புலாவ் கொத்துமல்லி புலாவ் காரட் இனிப்புப் புலாவ் பேரீச்சை இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |