|  | 
											
											
												| 
                                                        
	                                                        | மற்றொரு தமிழ் இணையதளம் |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() அக்டோபர் 2002 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| 'தலைமையகம்' என்ற பெயரில் தலையங்கம் தரப்படுகிறது. இந்தத் தலையங்கத்தில் நிகழ்கால நிகழ்வினையொட்டி சிறப்புக்கட்டுரை இடம் பெறுகிறது. 
 'வல்லரசு இந்தியா 2020' என்ற பிரிவில் இந்தியா வை வளமையான நாடாக்க நாம் செய்யவேண்டியது என்ன என்பது பற்றியும் இந்தியாவின் தற்போதைய நிலை மற்றும் அதற்கான காரணங்கள் பற்றியும் அலசி ஆராயப்படுகிறது. அருமையான விவாத மேடையை நிறுவ எண்ணம் கொண்டு ஒரு புதிய yahoo குழு ஒன்றை ஆரம்பித் திருக்கிறார்கள். Yahoo குழுவின் பெயர் "India Super Power Vision 2020". மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நீங்கள் TSCII தமிழ் எழுத்துருவை உங்கள் கணனியில் நிறுவி இருந்தால் அழகான தமிழை மின்னஞ்சல் வாயிலாக ரசிக்கலாம்.
 
 அரசியல் அரங்கம் 'சாணக்கியம்' என்ற பிரிவின் கீழ் படைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசியல் நிலை மட்டுமல்லாமல் இந்திய அரசியல் பற்றிய கட்டுரை களும் விவாதங்களும் இடம்பெறுகின்றன.
 
 இலக்கியப் படைப்புகளை 'தமிழமுது' என்ற பிரிவின் கீழ் நாம் கண்டு மகிழலாம். முதல் தொடராக கலைஞர். மு. கருணாநிதி எழுதிய குறளோவியத் திலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டுள்ளது.
 
 'நிலாச் சாரல்' பகுதியில் வளரும் கவிஞர்களின் படைப்புகளும்,  புகழ்பெற்ற கவிஞர்களின் படைப்பு களும், திரைக்கவி என்ற பிரிவில் திரைப்படப் பாடல்களையும் கண்டுகளிக்கலாம்.
 
 'நள பாகம்' நமது நாக்கிற்குச் சுவையான பகுதியாக அமைந்துள்ளது.
 | 
											
												|  | 
											
											
												| உடல் நலத்தைப் பேணுதல் பற்றியும் நோய்களைப் பற்றியும் 'உடலும் உயிரும்' பகுதியில் சித்தரிக்கப் பட்டுள்ளன. 
 சீரியஸாகவே இருந்தால் போதுமா சிறிது சிரிக் கவும் (முடிந்தால் ரசிக்கவும்) வேண்டாமா. இந்தக் குறையை 'லந்து எக்ஸ்பிரஸ்' பகுதி போக்குகிறது. முனியாண்டி தர்பார், அடாவடி போன்ற பகுதிகள் கவரும் வண்ணம் உள்ளன.
 
 "போதி மரம்" வலை நேசகர்களுக்கு ஆன்மீக ஞானத்தைப் போதிக்கிறது?!!
 
 சினிமா இல்லாமல் முழுமை அடைந்துவிடுமா என்ன? அதற்காகவே இருக்கிறது "ரீல் பெட்டி".
 
 பல பகுதிகள் இருந்தும், ஒவ்வொரு பகுதியின் தொகுப்பினைக் காண்பதற்கு வழியே இல்லை என்ற தோற்றம். முந்தைய பிரதிகளைப் படித்து என்ன ஆகப்போகிறது என்ற எண்ணமோ? என்று எண்ணு கையில் 'வழித்தடங்கள்' என்ற  வார்த்தை கண்ணில் பட, அட இதில் என்ன இருக்கிறது என்று பார்போமே என்று அவர்கள் கூறியுள்ளது போல "இங்கே கிளிக்குங்கள்" என்று செய்தால், ஒரு பட்டியல் கிடைக்கிறது.
 
 It all starts over here என்ற by-line பளிச்சிடுகிறது. இதற்கும் அல்வாசிட்டிக்கும் உள்ள தொடர்பினை கண்டுபிடிக்க முடியுமா என்று முயன்று பாருங்களேன்.
 
 ஸ்ரீவத்ஸன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |