புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் ராயல் புலாவ் கொத்துமல்லி புலாவ் காரட் இனிப்புப் புலாவ் பேரீச்சை இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தேவையான பொருட்கள்
  பாஸ்மதி அரிசி	-	2 கப் மிளகாய்ப் பொடி	-	1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது	-	சிறிது சீரகம்		-	1 ஸ்பூன் கிராம்பு		-	2 ஏலக்காய்		-	1 முந்திரி பருப்பு	-	6 நெய் அல்லது எண்ணெய்	-	சிறிதளவு உப்பு		-	தேவைக்கேற்ப வெங்காயம்		-	1
  கபாப் செய்ய வேண்டிய பொருட்கள்
  உருளைக்கிழங்கு	-	4 பச்சைமிளகாய்	-	3 இஞ்சி		-	சிறு துண்டு மிளகாய்ப் பொடி	-	1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்	-	1/2 தேக்கரண்டி சீரகம்		-	1 தேக்கரண்டி கொத்துமல்லி	-	சிறிது அரிசி மாவு	-	2 மேசைக்கரண்டி எண்ணெய் பொரிக்க  -	 தேவையான அளவு | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை
  அரிசியை 10 நிமிடம் ஊற விடவும். பிறகு வடிய வைக்கவும்.
  வாணலியில் நெய் விட்டு ஏலக்காய், கிராம்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி விழுதுகளை வதக்கி கொண்டு அரிசியையும் போட்டு வதக்கி, அதில் உப்பு போட்டு மிளகுத்தூள், மிளகாய்பொடி, பச்சைமிளகாயையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டித் தண்ணீர் விட்டுமூடி வேக விடவும். வெந்தவுடன் எடுத்து வைக்கவும்.
  கபாப் - உருளைக்கிழங்கை வேகவிட்டு உரித்து மிளகாய்ப்பொடி, மிளகுத்தூள், இஞ்சி விழுது, பச்சைமிளகாய், உப்பு, சீரகப்பொடி, கொத்துமல்லி ஆகியவற்றை போட்டு கெட்டியாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் பிரட்டி, எண்ணெய் போட்டுப் பொன்னி றமாகப் பொரித்து எடுத்துப் புலாவில் போட்டு முந்திரி வறுத்து போட்டுச் சாப்பிடவும்.
  தங்கம் ராமசாமி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் ராயல் புலாவ் கொத்துமல்லி புலாவ் காரட் இனிப்புப் புலாவ் பேரீச்சை இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |