|  | 
											
											
												| 
                                                        
	                                                        | www.tamilthirai.com |    |  
	                                                        | - ![]() | ![]() டிசம்பர் 2002 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| தமிழ்த் திரையின் encyclopaeda என்ற அடைமொழியோடு விளங்குகிறது www.tamilthirai.com 
 இவ்விணையத்தில் தமிழ் சினிமா பற்றிய பெரும்பாலான தகவல்கள் கிடைகின்றன.
 
 புதிதாக வந்துள்ள திரைப்படங்களின் விமர்சனங்களிலிருந்து 1931ம் ஆண்டு முதல் வெளியான படங்களின் பட்டியல் வரை சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
 
 நடிக, நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பயோடேட்டாவும் புகைப்படத் தொகுப்பும் சிறப்பான பகுதிகளாகும்.
 
 புது வரவுகள், பேட்டிகள், திருமண ஆல்பம், பாடல் பக்கம் போன்ற சுவையான பகுதிகளும் உள்ளன.
 
 நட்சத்திரங்களின் பிறந்த நாள் விபரங்கள் ரசிகர்களுக்கு விருந்தாகும் பக்கங்கள்.
 | 
											
												|  | 
											
											
												| 100 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஓடிய படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? அது குறித்த தகவல்களும் இங்கே காணக் கிடைக்கிறது. 
 நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள், வென்றவர்கள், சாதித்தவர்கள் பற்றிய தொகுப்பும், சினிமாவின் மூலம் அரசியல் கட்சிகளின் கொள்கைகளைப் பரப்பிய படங்கள் பற்றிய விவரமும் உள்ளது.
 
 அக் காலத்திலும், இக் காலத்திலும் கொடிகட்டிப் பறந்த கனவுக் கன்னிகளாம் கதாநாயகிகள் பற்றியும் தகவல் உண்டு. திரையில் பிரகாசித்த, சொந்த வாழ்வில் பிரகாசிக்காத தற்கொலை செய்து கொண்ட நட்சத்திரங்கள் பற்றியும், அந்த வரிசை நடிகையர் பட்டியலும் உள்ளது.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |