| வாழைப்பழ கேக் சாக்லேட் கேக்
 எலுமிச்சை கேக்
 ஆலிவ் ஆயில் கேக்
 7 கப் கேக்
 கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக்
 திருவாதிரை திருநாள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  கிருத்துமஸ் கேக் 
 தேவையான பொருட்கள்
 உப்பில்லாத வெண்ணை	-	1/2 கப்
 சர்க்கரை	-	1 1/2 கப்
 சர்க்கரை	-	2 ஸ்பூன் (சர்க்கரை பாகு செய்வதற்கு)
 முட்டை	-	3
 மைதா	-	3 கப்
 உப்பு	-	சிறிதளவு
 பால்	-	1/2 கப்
 வெண்ணிலா எசென்ஸ்	-	1/4 ஸ்பூன்
 பாதாம் எசென்ஸ்	-	1/4 ஸ்பூன்
 All Spice Powder	-	2 ஸ்பூன் (செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
 பேக்கிங் பவுடர்	-	2 ஸ்பூன்
 உலர்ந்த திராட்சை (கறுப்பு)	-	1/2 கப்
 கொட்டை நீக்கிய  துண்டுகளாக்கப்பட்ட பேரிச்சம் பழம்	-	1/2 கப்
 உலர் பழங்கள்	-	1 கப்
 ஆரஞ்சு, எலுமிச்சை சிறிய துண்டுகள்
 பாதாம் (சிறிய துண்டுகள்)	-	1/4 கப்
 பிஸ்தா (சிறிய துண்டுகள்)	-	1/4 கப்
 இன்ஸ்டண்ட் காபி தூள்	-	2 ஸ்பூன்
 (1 ஸ்பூன் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும்)
 
 All Spice powder
 
 தேவையான பொருட்கள்
 ஏலக்காய்	-	2
 லவங்கம்	-	2
 சோம்பு	-	2 ஸ்பூன்
 பட்டை	-	2
 ஜாதிக்காய்	-	1/4 பீஸ்
 
 செய்முறை
 
 மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் இட்டு தண்ணீர் விடாமல் பொடி செய்துகொள்ளவும்.
 
 சர்க்கரை பாகு:
 
 கனம் அதிகமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு மெல்லிய சூட்டில் அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரையத் தொடங்கியவுடன் விடாமல் கிளறவும். பிரவுன் கலராக மாறும் வரை கிளறவும். பின்னர் சிறிதளவு தண்ணீரை இதில் விடவும் (தண்ணீர் விடும் போது முகத்தின் மீது அடுப்பிலிருந்து தெளிக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ளவும்). ஆவி அதிகமாக வரும். ஒரு சில நொடிகளுக்குப் பிறகு சர்க்கரைப் பாகு தயார். அடுப்பை அணைத்துவிட்டு பாகினை ஆறவிடவும்.
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஓவனை (Oven) 350 டிகிரி Fக்கு சூடு படுத்தவும்.
 
 பெரிய கேக் பேனின் (cake pan) அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டின் மீது சிறிதளவு வெண்ணையைத் தடவவும். பின்னர் இதன் மீது லேசாக மைதாவைத் தடவவும். மைதா அதிகமாக இருக்கக்கூடாது.
 
 மைதா, மற்ற உலர் பொருட்கள் ஆகியவற்றை நன்றாக கலந்து சலித்தெடுக்கவும்.
 
 ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணையையும் சர்க்கரையையும் போட்டு நன்றாக க்ரீம் பதம் வரும் வரை அடித்துக் கிளறவும்.
 
 முட்டையை நன்றாக அடித்துக் கொண்டு அதனை வெண்ணை, சர்க்கரைக் கலவையோடு சேர்த்துக் கிளறவும்.
 
 சர்க்கரை பாகு, இன்ஸ்டண்ட் காபி கலவை, எசென்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும். பருப்புகள், உலர் பழங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறவும்.
 
 இப்பொழுது பால் மற்றும் சலித்து வைத்த மாவுக் கலவை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இதில் இட்டு கிளறவும். (முதலில் பாலில் தொடங்கினால் இறுதியில் பாலில் தான் முடிக்கவேண்டும்.)
 
 மிகவும் வேகமாகக் கிளறக்கூடாது.
 
 இந்தக் கலவையை கேக் பேனில் கொட்டி நிறவி விடவும் (கேக் பேனை மெதுவாக தட்டித் தட்டி நிறவவும்). ஸ்பூன் கொண்டு நிறவக்கூடாது.
 
 Ovenல் வைத்து bake செய்யவும். ஒரு டூத் பிக்கை எடுத்து கேக்கின் நடுவில் சொருகி எடுத்தால் டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல் இருக்கும் வரை bake செய்யவும்.
 
 பின்னர் எடுத்து ஒரு சில மணி நேரங்கள் ஆறவைத்து பின்னர் கட் செய்யவும்.
 
 பின் குறிப்பு: மொலாசஸ் கிடைத்தால் சர்க்கரை பாகிற்குப் பதிலாக 2 ஸ்பூன் மொலாசஸ் பயன்படுத்தலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாழைப்பழ கேக்
 சாக்லேட் கேக்
 எலுமிச்சை கேக்
 ஆலிவ் ஆயில் கேக்
 7 கப் கேக்
 கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக்
 திருவாதிரை திருநாள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |