பிரட் ஸ்பெஷல் பிரட் வடை பிரட்- கோகோ ஸ்வீட் பிரட் கேரட் கட்லெட் அன்னாசிப்பழம்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தேவையான பொருள்கள் 
  பிரட் துண்டுகள்	-	20 கேரட்	-	2 துருவியது தேங்காய்	-	1 கிண்ணம் துருவியது தயிர்	-	1/2 கிண்ணம் அரிசி மாவு (அ) ரவை	-	1 கிண்ணம் வெங்காயம்	-	1 பொடிதாக நறுக்கியது பச்சை மிளகாய்	-	2 கறிவேப்பிலை	-	பொடிதாக நறுக்கியது கொத்தமல்லி	-	பொடிதாக நறுக்கியது உப்பு	-	தேவைக்கேற்ப | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை
  அரிசிமாவை தயிரில் அரை மணிநேரம் ஊற விடுங்கள். பிரட் துண்டுகளை ஓரம் வெட்டியெடுத்து, லேசாகத் தண்ணீரில் முக்கிப் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். 
  தயிரில் ஊறிய அரிசி மாவுடன், துருவிய கேரட் மற்றும் தேங்காயைச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள்.   அத்துடன் தண்ணீரில் பிழிந்து வைத்த பிரட் துண்டுகளையும், பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளுங்கள். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை இட்லித்தட்டில் ஊற்றி அவித்தெடுங்கள். பூப்பொன்ற இட்லி தயார். 
  கொஞ்சம் சமையல் சோடா சேர்த்துக் கொண்டால் இட்லி மிருதுவாக இருக்கும். இதற்குக் காரமாக புதினா சட்னி அல்லது கொத்துமல்லி சட்னியைத் தொட்டுச் சாப்பிடலாம். 
  உலகம்மாள் கல்யாணசுந்தரம் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  பிரட் ஸ்பெஷல் பிரட் வடை பிரட்- கோகோ ஸ்வீட் பிரட் கேரட் கட்லெட் அன்னாசிப்பழம்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |