| அட்லாண்டா: ருக்மணி தேவி நினைவு நாட்டியம் S. V. சேகர் அமெரிக்கா வருகிறார்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அபிநயாவின் வர்ண மாலை |    |  
	                                                        | - ![]() | ![]() நவம்பர் 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  அபிநயா நடனக் குழுமம் (Abhinaya Dance Company) 'வர்ணமாலை: பரத நாட்டியத்தின் நிறங்கள்' என்ற நிகழ்ச்சியை நவம்பர் 22, 2003 அன்று மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டர், 1500 ஆலம் ராக் அவென்யூ, சான்ஹோசேவில் மதியம் 2 மணிக்கும், இரவு 8 மணிக்கும் வழங்கும். பரதநாட்டியக் கலையின் வெவ்வேறு பாணிகளையும், அவற்றிற்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளையும் இந்நிகழ்ச்சி சித்தரிக்கக் காணலாம். 
 இதில் பங்குபெறும் கலைஞர்கள் வருமாறு:
 
 கலைஞர்		பாணி
 
 இந்துமதி கணேஷ்	வழுவூர்  (கலை இயக்குநர், நிருத்தியோல்லாஸா நடனப் பயிற்சிக் கூடம்)
 
 வித்யா சுப்ரமணியன்	வழுவூர் (கலை இயக்குநர், லாஸ்யா நடனக் குழுமம்)
 
 மைதிலி குமார்,         பந்தநல்லூர் (கலை இயக்குநர், அபிநயா நடனக் குழுமம்)
 
 கே.பி. குஞ்ஞிராமன்	கலாக்க்ஷத்ரா
 
 கேதரைன் குஞ்ஞிராமன் (இயக்குநர்கள், கலாஞ்சலி இந்திய நடனங்கள்)
 
 நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மைதிலி குமார், இந்துமதி கணேஷ் மற்றும் வித்யா சுப்ரமணியன் இணைந்து வடிவமைத்த விநாயகரின் பெருமையைச் சித்தரிக்கும் நடனம் அமையும். அபிநயாவின் கலைஞர்களான தேவிகா அஜயா, சோனியா போஸ், பிரியா ·பெர்னாண்டஸ், பிரியா கிருஷ்ணமூர்த்தி, அனு ரங்கனாதன், மாதவ் விஸ்ஸா மற்றும் ராதிகா ஜாய்சுலா ஆகியோரின் நடனமும் நிகழ்ச்சியில் இடம் பெறும்.
 
 சாஹித்ய கர்த்தாவும் பாடகருமான ஆஷா ரமேஷ் (குரலிசை), என். நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), வித்யா ராமகிருஷ்ணன் மற்றும் மாளவிகா குமார் (நட்டுவாங்கம்), ராஜா சிவமணி (வீணை), ராகவன் மணியன் (குழல்) ஆகியோர் பின்னணி வழங்குவர்.
 
 அபிநயாவிற்கு சான்ஹோசே நகர நிர்வாகம், சிலிக்கன் வேல்லி கலைக் கழகம், கலி·போர்னியா கலைக் கழகம், வில்லியம் மற்றும் ·ப்ளோரா ·பவுண்டேஷன் ஆகியவை நிதியளிக்கின்றன.
 | 
											
												|  | 
											
											
												|  நுழைவுச்சீட்டு விவரம்: 
 மாலை நிகழ்ச்சிக்கு: நன்கொடையாளர் - 25 டாலர்; பொதுமக்கள் - 15 டாலர்; முதியோர் மற்றும் மாணவர் - 10 டாலர்; நால்வர் கொண்ட குடும்பம் (2 பொது, 2 முதியோர்\மாணவர்) - 45 டாலர்;
 
 மதிய நிகழ்ச்சிக்கு: நன்கொடையாளர் - 20 டாலர்; பொதுமக்கள் - 12 டாலர்; முதியோர் மற்றும் மாணவர் - 8 டாலர். குழுவாக வருவோருக்குக் கட்டணச் சலுகை உண்டு.
 
 விவரங்களுக்கும், நுழைவுச் சீட்டுகளுக்கும் தொடர்பு கொள்க: தொலைபேசி 408 983 0491.
 
 மின்னஞ்சல்: abhinaya_sj@yahoo.com
 
 நுழைவுச் சீட்டு வாங்க வலைத்தளம்: www.indogram.com/bay/abhinaya.html
 
 அபிநயாவின் வலைத்தள முகவரி: www.abhinaya.com
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அட்லாண்டா: ருக்மணி தேவி நினைவு நாட்டியம்
 S. V. சேகர் அமெரிக்கா வருகிறார்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |