| பந்தயக் காளைகள் தனுஷ் நடிக்கத் தடை!
 தேசிய விருது வென்ற குறும்படம்
 சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
 எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அசோகமித்திரனின் 'தண்ணீர்' படமாகிறது |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() பிப்ரவரி 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய பிரபலமான 'தண்ணீர்' நாவல் திரைப்படமாகிறது. 
 இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் கதைகளாக இருக்கின்றன. அதிலும் பெண்களைப் போகப்பொருளாகப் போட்டிபோட்டுக்கொண்டு சித்தரிக்கின்றன. இங்கொன்றும் அங்கொன்றுமாகவே சில சத்தான கதைகள் திரைக்கு வந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
 
 1970களில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'நடிகை நாடகம் பார்க்கிறாள்' 'யாருக்காக அழுதான்' போன்ற கதைகள் திரைப்படமாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 இயக்குநர் வசந்த் எழுத்தாளர் அசோகமித்திரனின் நாவலைப் படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். ''நல்ல இலக்கியப் படைப்புகள் சினிமாவாக எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் 'தண்ணீர்' நாவலை நான் சினிமாவாக எடுக்க உள்ளேன்'' என்று கூறுகிறார் வசந்த்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பந்தயக் காளைகள்
 தனுஷ் நடிக்கத் தடை!
 தேசிய விருது வென்ற குறும்படம்
 சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
 எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |