| அம்மாவே இனிஷியலாக... ஆச்சி வருகிறார் அலியாக
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இந்திப் படம் பிடிக்காத நந்திதா! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மே 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'அழகி' உள்பட மூன்று தமிழ்ப்படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். இந்தித் திரைப்படத்தை விடவும் தமிழ், மலையாளம், வங்காளம் போன்ற மாநில மொழிப் படங்களில் நடிப்பதே பிடித்தமான விஷயம் என்கிறார். 
 ''இந்திய மண்ணின் உண்மையான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்க மாநில மொழிகளிலேயே அதிக முயற்சி நடக்கிறது. இந்தியில் வியாபார நிமித்தம் பல சமரசங்களைச் செய்துகொண்டு, செயற்கைத்தனமான காட்சிகளைக் கொண்ட படங்கள் வருகின்றன. இதுபோன்ற சினிமாவுடன் எனக்கு உடன்பாடில்லை'' என்று சொல்கிறார் நந்திதா.
 
 தங்கர்பச்சன் இயக்கத்தில் 'அழகி'யில் நடித்ததைப் பெருமையாகக் கூறும் நந்திதா தற்போது தமிழில் 'விஷ்வ துளசி' படத்தில் நடிக்கிறார். இதை இயக்கும் சுமதி திரைத்துறைக்குப் புதியவர். இவர் ஒரு புதிய கோணத்தில் சிந்தித்து, வித்தியாசமான திரைப்படத்தைத் தர விரும்புகிறவர் என்று சுமதி புகழ் பாடுகிறார் நந்திதா தாஸ்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அம்மாவே இனிஷியலாக...
 ஆச்சி வருகிறார் அலியாக
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |