Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |நவம்பர் 2026|
Share:
பணவீக்கம், வளங்கள் பற்றாக்குறை, வேகமாக மாறிவரும் டிஜிட்டல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க இயலாமை ஆகியவற்றால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாக உலக நாடுகளில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த அதிருப்தியை இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது. இத்தனை பெரிய மக்கள் தொகை இருந்தும் இதைச் செய்ய முடிந்திருப்பது பாராட்டத்தக்கது. அடிப்படைத் தேவைகள் முதல் வாழ்க்கைத் தரம் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துதல், சாலைகள், ரயில்வே, வீட்டுவசதி, பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற உள்கட்டமைப்பு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, அரசு மருத்துவமனைகள் மூலம் குறைந்த செலவில் அதிநவீன மருத்துவ கவனிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயலாக்கம் ஆகியவற்றின் போதாமை பரவலாக இளைய தலைமுறையை உலகின் பல நாடுகளில் அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. இந்தச் சூழலிலும் ஏற்றுமதி, செமிகண்டக்டர், விண்வெளி, பாதுகாப்பு உபகரணங்கள், AI, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத் தக்கதாகும்.

★★★★★


"மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தீமை செய்யும் வல்லமையை செயற்கை நுண்ணறிவு 2030 வாக்கில் அடைந்துவிடக் கூடும்" என்று சொல்லியிருப்பது யார் தெரியுமா? ChatGPTயை உருவாக்கியுள்ள OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மன்! அரசாங்கங்களும் பன்னாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். நாம் இதைப் பேசிக்கொண்டிருக்கும் போது, Binance கிரிப்டோ நாணயச் சந்தையிலிருந்து $6.3 மில்லியன் மதிப்புள்ள XRP கிரிப்டோ நாணயத்தை ஹேக்கர் ஒருவர், செயற்கை நுண்ணறிவின் உதவியோடு திருடிவிட்ட அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது. முன்னரே சில அரசாங்க இணையதளங்களின் பாதுகாப்பை உடைத்து AI ஏஜண்டுகள் நுழைந்துள்ளன. எதுவுமே AI-யின் ஊடுருவலுக்குத் தப்பமுடியாது என்கிற நிலை உருவாகி வருகிறது. உடனடி நடவடிக்கை தேவை. குதிரைகள் தப்பி ஓடியபின் லாயத்தைப் பூட்டிப் பயனில்லை.

★★★★★


சிறார் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ள தமிழறிஞர் முனைவர் மலையமான் அவர்களைப் பற்றிய கட்டுரை, கல்கி எழுதிய "ஓ! மாம்பழமே!" என்ற சுவையான கட்டுரை, அருமையான சிறுகதை, எழுத்தாளர் பொன்னித்துறைவன் வாழ்க்கைக் குறிப்பு என்று பல அம்சங்களோடு தென்றல் உங்களை வந்தடைகிறது.
வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.

தென்றல்
நவம்பர் 2026
Share: 




© Copyright 2020 Tamilonline