கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் தமிழ் விக்கி - தூரன் விருது கோவை விஜயா வாசகர் வட்ட விருது மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | ஜூலை 2022 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது நண்பர்களும் இணைந்து தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த செய்திகளை ஒருங்கிணைக்கும் இணையக் கலைக்களஞ்சியமாக இது உருவாகி வருகிறது.
  மே 07, 2022 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி, பிராம்டன் நடுநிலைப் பள்ளியில் (ஆஷ்பர்ன்), தமிழக நாட்டாரியல் ஆய்வு முன்னோடியான பிரெண்டா பெக்கால் தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த தாமஸ் புரூய்க்ஸ்மா லேசர், இயற்பியல் துறை நிபுணரும் அறிவியல் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதுபவருமான திரு வி. வெங்கடரமணன், ஆஷ்பர்ன் நூலகத் தலைவர் சங் லியு ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். தமிழ் கலை, இலக்கியம், பண்பாட்டுத் தரவுகளையும் செயல்பாடுகளையும் பொதுவாகத் தொகுத்தலே இதன் பணி. என்றும், ஆசிரியர் குழுவினரின் பரிசீலனைக்குப் பின்னரே பதிவுகள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடுகிறார் இதன் அமைப்பாளரான ஜெயமோகன். மேலும் அவர், "வாசகர்களின் பங்களிப்பு ஏற்கப்படும் என்றும், கட்டுரைகள் எழுதவும், திருத்தவும் வாசகர்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார். | 
											
											
												| 
 | 
											
											
											
												| tamil.wiki/wiki | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் தமிழ் விக்கி - தூரன் விருது கோவை விஜயா வாசகர் வட்ட விருது மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |