| மந்திர யோகம் மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
 செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின்  பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005 |    |  
	                                                        | - தில்லை குமரன் ![]() | ![]() ஏப்ரல் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஏப்ரல் 23, 2005 அன்று மாலை தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவதுடன் தமிழ்ப் பண்பாட்டு மையத்தையும் வரவேற்க வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் நிகழ்ச்சி யொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி மாலை 5:00 மணிக்கு CET அரங்கத்தில் (701 Vine St, San Jose, CA 95110) நடைபெறும். 
 இந்த மாலைப் பொழுதில் பிரபல கலைஞர்கள், மனதைக் கவர்ந்த நேற்றைய மற்றும் இன்றைய தமிழ்த் திரை இசைப் பாடல்கள், நடனங்கள், நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவற்றை வழங்குவார்கள். அறுசுவை உணவும் நிச்சயம் உண்டு.
 
 இந்நிகழ்ச்சி, துவக்கம் முதல் முடிவு வரை ஒரே கதைக் களத்துடன் செல்ல உள்ளது. எனவே முன்னமே வந்து தொடக்கத்திலிருந்து முழுக் கதையையும் காண்பது அவசியம்.
 
 தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும் இரு கண்கள் என்பதால், வளைகுடாப் பகுதியில் 'தமிழ்ப் பண்பாட்டு மையம்' ஒன்றை நிறுவும் அரிய பணியின் முதல் படி இது. 25 ஆண்டுக் காலமாக இப்பகுதி மக்களுக்கும், பல தொண்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்துவரும் தமிழ்மன்றம் இப்பகுதியில் செம்மொழியான தமிழின் வளர்ச்சியில் பங்காற்றவும், தொன்மையான தமிழ்ப் பண்பாட்டை நிலை நாட்டவும் ஒரு நிரந்தர மையத்தை உருவாக்க உள்ளது. இந்த மாலை அதற்குக் கால்கோளாகவும் அமையும்.
 | 
											
												|  | 
											
											
												| நிகழ்ச்சி: சித்திரைக் கொண்டாட்டம் 2005
 நேரம்: ஏப்ரல் 23, 2005
 மாலை 5:00 மணி
 இடம்: CET, 701 Vine St,
 San Jose, CA 95110
 
 விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org
 
 தில்லை க. குமரன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மந்திர யோகம்
 மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
 செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின்  பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |