| தக்காளி ஆம்லெட் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் வேர்க்கடலை	-	1 கிண்ணம்
 எள்	-	1/4 கிண்ணம்
 தேங்காய்த் துருவல்	-	2 மேசைக்கரண்டி
 மிளகாய் வற்றல்	-	3 (அ) 4
 உளுத்தம்பருப்பு	-	1 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிதளவு
 உப்பு	-	தேவைக்கேற்ப
 கறிவேப்பிலை	-	சிறிதளவு
 எண்ணெய்	-	தாளிக்க
 
 செய்முறை
 வேர்க்கடலையை வாணலியில் வறுத்து, தோல் நீக்கிப் புடைத்து எடுத்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். எள்ளை வாணலியில் வறுத்துப் பொடியாய் அரைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை வறுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் சிறிது எண்ணெய்விட்டு வறுத்து, பொடியாக அரைத்து, வேர்க்கடலை, எள், தேங்காய்த் துருவல், மிளகாய், உளுத்தம்பருப்பு பொடித்தது எல்லாவற்றையும் உப்புச் சேர்த்து கலந்துகொள்ளவும். பொலபொலவென சாதம் வடித்து, அதில் பொடியைப் போட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கலந்து சாப்பிடலாம். தயிர்ப் பச்சடி தொட்டுக்கொள்ள சுவைக்குச் சுவை, சத்துக்குச் சத்து.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தக்காளி ஆம்லெட்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |