பஞ்சம் பூரி
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | டேப்லா (Thepla) | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | அக்டோபர் 2020 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												தேவையான பொருட்கள் கோதுமை மாவு	-	2 கிண்ணம் கொத்துமல்லிப் பொடி	-	3 தேக்கரண்டி சீரகப்பொடி	-	1 தேக்கரண்டி எண்ணெய்	-	1/2 கிண்ணம் மிளகாய்த் தூள்	-	1/2 மேசைக்கரண்டி வெந்தயக்கீரை	-	2 கட்டு (சிறியது) சீரகம்	-	ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் பொடி	-	1 தேக்கரண்டி உப்பு	-	தேவைக்கேற்ப தயிர்	-	1 தேக்கரண்டி நெய்	-	சிறிதளவு எண்ணெய்	-	சிறிதளவு
  செய்முறை எல்லாவற்றையும் போட்டு, கீரையையும் பொடியாக நறுக்கிப் போட்டு, கோதுமை மாவுடன் உப்பு, தயிர் சேர்த்து, அரைக் கிண்ணம் எண்ணெயை விட்டுப் பிசையவும். ஒரு மணி நேரம் ஊறியபின் சப்பாத்திபோல் இடவும். தோசைக்கல்லில் போட்டு, நெய் எண்ணெயைச் சுற்றிலும் துளி விட்டு வெந்து எடுக்கவும். பயணங்களுக்குச் சிறந்தது. இரண்டு, மூன்று நாட்கள் கெடாது. குஜராத்தில் இது மிகப் பிரபலமான உணவு. | 
											
											
												| 
 | 
											
											
											
												தங்கம் ராமசாமி, நியூ ஜெர்ஸி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  பஞ்சம் பூரி
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |