| சேனைக்கிழங்கு பஜ்ஜி 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் சேனைக்கிழங்கு (தோல் சீவி நறுக்கியது)	-	1 1/2 கிண்ணம்
 வெங்காயம் (நறுக்கியது)	-	1 கிண்ணம்
 கடலைமாவு	-	1 கிண்ணம்
 அரிசிமாவு	-	1/4 கிண்ணம்
 தேங்காய்த்துருவல்	-	2 மேசைக்கரண்டி
 மஞ்சள்தூள்	-	1 தேக்கரண்டி
 பச்சைமிளகாய்	-	2
 இஞ்சி	-	1 சிறிய துண்டு
 மிளகாய்த்தூள்	-	2 தேக்கரண்டி
 முந்திரிப்பருப்பு	-	8
 கறிவேப்பிலை	-	சிறிதளவு
 உப்பு	-	தேவைக்கேற்ப
 எண்ணெய்	-	பொரிப்பதற்கு
 நெய்	-	சிறிதளவு
 
 செய்முறை
 சேனைக்கிழங்கைச் சிறிது உப்புப்போட்டு கொஞ்சம் வேகவிட்டு எடுத்து வடியப் போடவும். அதை மிக்சியில் அரைத்து எடுத்து, வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, தேங்காய்த்துருவல், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், நறுக்கிய முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு தேவைக்கேற்பப் போட்டு, நெய்விட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் காயவிட்டு பக்கோடா உருட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துச் சாப்பிடவும். கெச்சப் தொட்டுக் கொள்ளலாம். சுவையான பக்கோடா.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சேனைக்கிழங்கு பஜ்ஜி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |