| அவல் வடை 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் அவல் - 2 கிண்ணம்
 பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
 பாதாம்பொடி - 1 தேக்கரண்டி
 தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
 வெல்லம் (பொடித்தது) - 1 கிண்ணம்
 ஏலக்காய் - 4
 முந்திரி - 6
 திராட்சை - 10
 நெய் - 1 கிண்ணம்
 
 செய்முறை
 அவலைச் சிறிது நெய் விட்டுச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். பொட்டுக்கடலையைச் சிறிது வறுத்து மையப் பொடித்து  தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அவல், பாதாம், பொட்டுக்கடலைப் பொடிகளுடன், வெல்லம், முந்திரி ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். அதில் நெய்யை நன்றாகச் சுடவிட்டு, ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கலாம். இது மிகச் சுவையான, சத்தான லட்டு.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அவல் வடை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |