| அனைத்துமானவள் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| காலத்தின் கட்டாயத்தினால் கடல்கடந்து வந்திருக்கும் எங்களுக்கு
 காவல் தெய்வங்களே நீங்கள்தான்!
 
 அனைவராலும் அமெரிக்கா வரமுடியவில்லை என்பதற்கு
 அமெரிக்கத் தூதரகமே சாட்சி!
 
 நீங்கள் கொடுத்த படிப்பு, தன்னம்பிக்கையால்
 நாங்கள் இங்கு இன்று!
 அதற்குச் சிறு கைமாறுதானோ
 நீங்கள் இங்கிருப்பது!
 
 தங்கக் கூண்டுதான்,
 எங்களுக்கும் தெரியும்.
 ஆனால் நாங்களும் அல்லவா
 அந்தக் கூண்டில் உங்களுடன்...
 குடும்பம் என்ற ஒரு கூண்டில்தான் நாம் இருக்கிறோம்.
 
 ஆறுமாதம் உங்களுக்கு வனவாசம்,
 ஆனால் எங்களுக்கு தினந்தினம் திருவிழா!
 எங்கள் நாக்கு மறந்துபோன சுவையை
 அடுப்பங்கரையில் மறுபடி அள்ளித்தந்தவை
 உங்கள் கைகள்!
 
 கூட்டுக்குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு
 அறிமுகப்படுத்துவதும்
 உங்கள் வருகையினால்தான் நிகழ்கின்றது.
 | 
											
												|  | 
											
											
												| நீங்கள் வந்துசென்ற நினைவலைகள் வாழ்நாள் முழுவதும்
 எங்கள் எண்ணக்கடலில்
 அலை மோதிக்கொண்டே இருக்கும்!
 
 நீங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும் அழகில்
 நாங்களும் அல்லவோ உடன் பயணித்தோம்!
 
 பார்த்துப் பார்த்து நீங்கள் வாங்கிவந்தவை
 பத்திரமாய் நீங்கள் ஊர் சென்ற பிறகுதான்
 பயன்படும் எங்களுக்கு.
 
 தொப்புள்கொடிச் சொந்தம் என்பதால்
 தொலைதூரம் கடந்து வந்தீர்கள்.
 காலநேர மாற்றம்கூடக் கலவரப்படுத்தவில்லை...
 உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்கள்.
 
 மொழியறியா ஊரில்
 எது வந்தாலும் சமாளிக்கும் திறன்
 உங்களிடம் இருந்துதான் எங்களுக்கு!
 
 மகனுக்குப் பிடித்த மா வத்தலும்,
 மருமகள் அனுப்பி வைத்த பட்டியலும்
 பேரன் பேத்திகளுக்கு இன்னொரு பட்டியலும்
 எதை எடுக்க மறந்தீர்கள்!
 
 வெளிநாட்டிற்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு
 ஒற்றைத் தொலைபேசி மணிக்காகக் காத்திருக்கும்
 அத்துணை பெற்றோருக்கும் இக்கவிதை சமர்ப்பணம்!
 
 திருவரங்கப்ரியா,
 சாமர்செட், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அனைத்துமானவள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |