| கார இட்லி 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் இட்லி - 6
 புளிக்காத தயிர் - 2 கிண்ணம்
 தேங்காய் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
 இஞ்சி - சிறு துண்டு
 கசகசா - 1/4 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் - 4
 உப்பு - தேவைக்கேற்ப
 கொத்துமல்லி - சிறிதளவு
 கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
 காராபூந்தி - 1/4 கிண்ணம்
 எண்ணெய் - சிறிதளவு
 
 செய்முறை
 இட்லி தயார் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுக்கவும். தேங்காய், மிளகாய், இஞ்சி, கசகசா இவற்றை மிக்சியில் அரைத்து, தேவையான உப்பு சேர்த்து, லேசாகக் கொதிக்க விடவும். இதைத் தயிரில் கரைத்துக் கொள்ளவும். வறுத்த இட்லிகளை அகலத் தட்டில் வைத்து மேலாகக் கலவையை ஊற்றவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவவும். பரிமாறும்போது மேலாகக் காராபூந்தியைத் தூவிச் சாப்பிட்டால், சுவையோ சுவை!
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கார இட்லி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |