| புத்தகம், குறுந்தகடு வெளியீடு: ஓர் இசைக்கலைஞரின் நினைவலைகள் சிகாகோவில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி
 சிகாகோ ராமர் கோவிலில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி
 ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் கண்ணதாசன் விழா
 டொராண்டோ நிகழ்வுகள்
 மிச்சிகன் பராசக்தி கோவில் குபேரலிங்கப் பிரதிஷ்டை விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  தமிழ்நாட்டில் சேவை செய்து வரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம், நன்கொடை திரட்டுவதற்காக, ஏப்ரல் 7, 2007 அன்று, வசந்த விழாவான கலாட்டா-2007 என்னும் கலை நிகழ்ச்சியை, ஹேவர்ட் Chabot College -ல் நடத்தியது. 
 பிற்பகலில் கலை நிகழ்ச்சிகளும் போட்டி களும், மாலையில் பல்லவி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பலர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலந்து கொண்டு குதூகலித்தது, பெரும் கலாட்டாவாக இருந்தது. Galaata Idol இசைப்போட்டியில் நூற்றுக்கும் மேலானவர்கள் பங்கேற்று தங்கள் பாட்டுத் திறமையைக் காட்டினர். போட்டியில் முதல் இரண்டு இடங்களை அடைந்த ப்ரித்வி குருராஜ் மற்றும் கிருஷ்ணா உப்புலூரி இருவரும், பல்லவி குழுவினருடன் சேர்ந்து ஓர் இருவரிசை பாடினர்! ப்ரித்வி, 2007-ன் கலாட்டா ஐடலாக ரசிகர்களால் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே மிகவும் வயதில் சிறியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இத்துடன், Matinee Madness நிகழ்ச்சியில் சிரிப்பா செருப்பா, கோலிவுட் க்விஸ், பாட்டுக்குப் பாட்டு போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. மற்றும் உடையலங்கார அணிவகுப்பும் நடனமும் இடம்பெற்றன.
 
 இந்த வருட விழாவில் திரட்டப்பட்ட 50,000 டாலருக்கும் மேற்பட்ட நிதி, உதவும் கரங்களின் சமூக நல நற்பணி முயற்சிகளுக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. 23 வருடங்களாக இந்தியாவில் ஏதிலி களுக்கும் ஊனமுற்றோருக்கும் அடைக்கலம் தந்து வரும் உதவும் கரங்கள், தன் நற்பணிக்காக நன்கொடைகளையும் தொண்டர்களையும் வரவேற்கிறது.
 | 
											
												|  | 
											
											
												| நிதி உதவி அளிக்கவும், பணி புரியவும் தொடர்பு கொள்க:http://www.udavumkarangal-sfba.org, http://www.galaata.org 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 புத்தகம், குறுந்தகடு வெளியீடு: ஓர் இசைக்கலைஞரின் நினைவலைகள்
 சிகாகோவில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி
 சிகாகோ ராமர் கோவிலில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி
 ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் கண்ணதாசன் விழா
 டொராண்டோ நிகழ்வுகள்
 மிச்சிகன் பராசக்தி கோவில் குபேரலிங்கப் பிரதிஷ்டை விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |