| தக்காளித் தொக்கு வெங்காயத் தொக்கு
 இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு
 கிரான்பெர்ரி தொக்கு
 எலுமிச்சைத் தொக்கு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  மாங்காய்த் தொக்கு 
 தேவையான பொருட்கள்
 
 மாங்காய்	- 2
 மிளகாய்ப் பொடி - 1/2 கிண்ணம்
 வெந்தயம்	- 1 தேக்கரண்டி
 பெருங்காயம் - 1 தேக்கரண்டி
 கடுகு - 1 தேக்கரண்டி
 மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
 ந. எண்ணெய் - 1 கிண்ணம்
 உப்பு - தேவைக்கேற்ப
 வெல்லம் -	பிடித்தால் சேர்க்கலாம்.
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 மாங்காயைத் தோல் சீவி, கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் கடுகு தாளித்து, அதில் சீவி எடுத்து வைத்திருக்கும் மாங்காயைப் போட்டுக் கிளறவும். சிறிது நேரம் கழித்துத் தேவையான உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட்டு மேலும் கிளறவும். நன்றாக தளதளவென்று வரும்போது பொடி செய்து வைத்திருக்கும் வெந்தயப் பொடியை அதன் மேல் தூவவும். பின்பு மாங்காய் நன்றாகச் சுருள வதங்கி வரும் போது கீழே இறக்கி வைக்கவும். இனிப்பு விரும்புவர்கள் சிறிது வெல்லம் போட்டுக் கிளறிக் கொள்ளவும்.
 
 தங்கம் ராமசாமி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தக்காளித் தொக்கு
 வெங்காயத் தொக்கு
 இஞ்சி பச்சை மிளகாய்த் தொக்கு
 கிரான்பெர்ரி தொக்கு
 எலுமிச்சைத் தொக்கு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |