சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் ரமலான் இஃப்தார் விருந்து லிவர்மோரில் நவராத்திரி பிரும்மோத்ஸவம் இந்திய மேம்பாட்டு நிறுவனம் - சன்ஹிதி வழங்கிய 'அதிர்வுகள்' லிவர்மோர் ஆலயத்தில் பஞ்சபூதங்களின் மறுபக்கம் ரோஹிணி வெங்கட்ராமன் நடன அரங்கேற்றம் 'தொடுவானம்' தமிழ்த் திரையிசை நிகழ்ச்சி அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கத்தின் (ATMA) முதல் மாநாடு அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
|
 |
| வட கலிஃபோர்னியத் தமிழர்கள் அமைப்பின் கலைவிழா 2005 |
   |
- மைதிலி இளங்கோ | நவம்பர் 2005 |![]() |
|
|
|
|
அக்டோபர் 15, 2005 அன்று ஃபிரிமாண்டில் நடந்த கலைவிழாவுக்கு வட கலிஃபோர்னியா வெங்குமிருந்து சில நூறு ஈழத்தமிழ்க் குடும்பங்கள் வந்திருந்தனர். சான் ஃபிரான் சிஸ்கோ பகுதியில் வாழும் தமிழகத் தமிழர் சிலரும் பங்கேற்றனர். பதின்ம வயதினர் (teenagers) பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியம், தமிழ் மரபிசை, திரை யிசைப் பாடல்கள், நாடகங்களுடன், சன்ஹிதி நடனங்கள், சுரபி இசைக்குழு வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சி நள்ளிரவு வரை மக்களைக் கட்டிப் போட்டு வைத் திருந்தது. ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் வழங்கிய 'அன்றிலிருந்து இன்று வரை' என்ற நகைச்சுவைக் குறுநாடகத்தில் எம்ஜிஆர்-ஜெயலலிதா, ஜெமினி-சாவித்திரி, கமல்-ஸ்ரீதேவி போன்ற பழைய ஜோடிகள் முதல் இன்றைய சூரியா-ஜோதிகா ஜோடி வரை எல்லோரையும்போல் நடித்தவர்கள் பார்வை யாளர்களைக் குலுங்க வைத்தனர். |
|
|
சன்ஹிதியின் வேக நடனங்கள் பல பார்வையாளர்கள் தாளம் போட மற்றவர் களை ஆட வைத்தன. சுரபி இசைக்குழுவின் பிரபு, ராஜா, ஷ்ருதி, ஜெயஸ்ரீ, ஆரத்தி, பவித்ரா ஆகியோரின் இனிமையான குரல்கள் கலைவிழாவுக்கு மெருகூட்டின. சிந்து பைரவி படத்திலிருந்து 'பாடறியேன்' என்ற கடினமான பாடலை மேடையில் அனாயசமாகப் பாடி ஆரத்தி முரளி மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
மைதிலி இளங்கோ |
|
 |
More