Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சாதனையாளர் | நேர்காணல் | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 கல்கி குழுமம் பற்றிய செய்தி குறிப்பு

80 வருட பாரம்பரியம் மிக்க கல்கி குழுமம் இன்று டிஜிட்டல் உலகில் தடம் பதித்து வீறுநடை போடுகிறது.

அச்சு இதழ்களில் இருந்து டிஜிட்டல் பத்திரிக்கைகளாக மாறிய தருணத்தில், கல்கி குழுமத்தின் உரிமமும் மாறியது. கடந்த ஒரு வருட காலமாக கல்கி ஆன்லைன் இணையதளத்தின் வாயிலாகவும், கல்கி ஆன்லைன் Youtube சேனல் வாயிலாகவும், FB, insta போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேயர்களை சந்தித்து உரையாடி வருகிறது கல்கி குழுமம். அதற்கு வாசகர்கள் அளிக்கும் வரவேற்பும் உற்சாகமும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

கல்கி ஆன்லைன் இணையதளம்:
கடந்த மூன்று மாதங்களில் 200% மேலான வளர்ச்சியை கண்டுள்ளது www.kalkionline.com. இந்த வளர்ச்சிக்கான மற்றொரு காரணமும் உண்டு. வார, மாத இதழ்களாக வெள்ளி, சனி மற்றும் மாதம் முதல் தேதியன்று வெளியிடப்பட்டு வந்த கல்கி, மங்கையர் மலர், தீபம் இதழ்களில் தற்சமயம் தினம் தினம் கட்டுரைகளும், படைப்புகளும் www.kalkionline.com இணையதளம் வாயிலாக பதிவேற்றப்படுகின்றன.

இனி வரும் மாதங்களில் மேலும் பலப்பல சுவாரஸ்யமான பகுதிகளும், தினச்செய்திகளும், தரமிகு படைப்புகளும் களம் இறங்கப் போகின்றன.

Visit : www.kalkionline.com

மென்பேனா:
மேலும், எழுத்தாளர்களும், கட்டுரையாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும், ஏன், எழுத்தார்வம் மிக்க அன்பு வாசகர்களும் தத்தம் படைப்புகளை கல்கி ஆன்லைன் இணையதள ஆசிரியர் குழுவிற்கு நேரடியாக அனுப்பி விடலாம். இதற்காகவே, பிரத்தேயகமான 'மென்பேனா' என்ற பகுதி இணையதளத்தில் அறிமுகமாகியுள்ளது. ஏராளமானோர் 'மென்பேனா' வழியே படைப்புகளை அனுப்பியும் வருகின்றனர்.

கல்கி அன்பர்களே! நீங்களும் இந்த kalkionline.com/ugc என்ற இணையதள முகவரிக்குச் சென்று உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றிய செய்தி குறிப்புகள், நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகள், அழைப்புகள் அவற்றிற்கான விவரங்கள் ஆகியவற்றை கல்கி குழுமத்தின் CEO மற்றும் ஆசிரியர் லக்ஷ்மி நடராஜன் அவர்கள் பார்வைக்கு நேரடியாக deskmd@kalkiweekly.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கலாம்.

கல்கி டிஜிட்டல் தீபாவளி மலர்:
2022 வருட 'கல்கி தீபாவளி மலர் 'மின்' மலராக வெளியிடப்பட்டுள்ளது.

80 வருட கல்கி தீபாவளி மலர் களஞ்சியத்திலிருந்து கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயண அனுபவங்கள், ஆன்மிகத் தகவல்கள், சினிமா என்று… வாசமிகு கதம்ப மலர் மாலையாக மிளிரும் இந்த டிஜிட்டல் தீபாவளி மலர் 2022, கல்கி குழுமத்தின் முதல் டிஜிட்டல் மலர் மட்டுமன்று ; தமிழ் பத்திரிகையுலகின் முதல் டிஜிட்டல் மலரும் கூட என்பது கூடுதல் பெருமை.

இந்த மின் மலர்
Pustaka மற்றும் Amazon தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

[அமேசான் இந்தியா வலைதள முகவரி மட்டும் கொடுத்துள்ளோம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அவரவர்களின் அமேசான் இணைய தளத்திற்குச் சென்று (உ.தா. amazon.com, amazon.co.uk, amazon.co.jp etc.,] kalki digital Deepavali malar என்று தேடி தரவிறக்கிக்கொள்ளலாம்.

விலை மிக மிகக் குறைவு:
அறியும் செய்திகளின் மதிப்போ மிக மிக உயர்வு.

கல்கி குழுமத்தின் பொக்கிஷப் பெட்டகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இம்மலரைப் படித்து மகிழுங்கள் !

கல்கி களஞ்சியம்:
கல்கி குழுமத்தின் ஐந்து இதழ்களான கல்கி, மங்கையர் மலர், தீபம், கோகுலம் தமிழ் மற்றும் கோகுலம் ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய 80 வருட பொக்கிஷம். அமரர் கல்கி, கவியரசர் கண்ணதாசன், ரசிகமணி டி.கே.சி, மூதறிஞர் ராஜாஜி, சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், இந்திரா செளந்தர்ராஜன் போன்ற ஏராளமான எழுத்தாளர்களின் எண்ணற்ற படைப்புகளை தாங்கிய 80 வருட இதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் கல்கி களஞ்சியம் பகுதியில். மொபைல் ஃபோனிலும் படிக்கலாம்.

இப்பகுதிக்கான சந்தா விவரங்கள்:
மாத சந்தா ரூ. 250/- மட்டுமே.
ஆறு மாத சந்தா ரூ. 1300/-
ஆண்டு சந்தா ரூ. 2500/-
மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 7000/- மட்டுமே.

சந்தா செலுத்தி படிக்க: kalkionline.com/subscription

பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்:

காணொளித் தொடர் மற்றும் பயண ஏற்பாடு:
கல்கி குழுமத்தின் Youtube சேனலுக்காக அமரர் கல்கியின் பொக்கிஷப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ பாதையில் சென்று அப்புதினத்தில் இடம்பெறும் பல இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தி 16 காணொளிகள் கொண்ட தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது கல்கி குழுமம்.

நமது பாரம்பரியமும் வரலாறும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லவே இந்த அற்புத முயற்சி. சரித்திரம், இலக்கியம், பயணம் என்று முக்கோணங்களிலிருந்து இந்த படப்பிடிப்பு அமைந்துள்ளது.

கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களுக்கு வந்தியத்தேவன் சென்ற ராஜபாட்டையில் மக்கள் பயணித்து, அவற்றைக் கண்டு களித்து, சரித்திர நிகழ்வுகளை அப்போதைக்கு அப்போதே அனுபவித்து மகிழ வேண்டும் என்கிற எண்ணத்தில் கல்கி குழுமம் இந்தக் காணொளித் தொடரை வெளியிட்டு உள்ளது. பலரும் தத்தம் கண்ணோட்டத்தில், இந்த சரித்திரக் காவியத்தை அணுகினாலும், அமரர் கல்கியின் பார்வையில் இருந்து தடம் புரளாமல், கல்கி குழுமம் இந்த படப்பிடிப்பை மிகுந்த கவனத்துடன் தயாரித்துள்ளது.

வரலாற்றின் மீதுள்ள உண்மையான நேசத்துடனும், ஆர்வத்துடனும், ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் இந்தப் பயணத் தொகுப்பை வழங்கி, தானே அதை வழிநடத்தியும் செல்கிறார், பத்திரிகையாளரும், சரித்திர நாவலாசிரியருமான 'காலச்சக்கரம்' நரசிம்மா என்கிற டி.ஏ. நரசிம்மன். ஆங்காங்கே ஊர்களின் பெயருக்கான காரணத்தையும், மருவி போன பெயர்களையும், அதிகம் அறியப்படாத சுவாரஸ்ய சரித்திர தகவல்களையும் குறிப்பிட்டு, இந்தப் பயணத்தை அவர் சுவாரசியப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்த 16 எபிசோட் காணொளி தொடருக்கான லிங்க் இதோ: youtube.com

காணொளிகளை கண்டு ரசிப்பதோடு மட்டும் நிற்று விடாமல், உலகளாவி திரண்டிருக்கும், 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களை ஒன்றுதிரட்டி, கால இயந்திரத்தில் அவர்களைக் கூட்டிச் சென்று, சோழர் சரித்திரத்தை நுகரச் செய்வதே கல்கி குழுமத்தின் தலையாய நோக்கம்.

ஐந்து நாட்கள் 20 க்கும் மேற்பட்ட இடங்கள் என அமையும் இப்பயணம், பொன்னியின் செல்வன் தொடங்கும் வீராணம் ஏரியில் தொடங்குகிறது. இதுவரை பயணித்த பயணிகள் கொடுத்த உற்சாகத்தாலும் ஊக்கத்தாலும் மாதம் தோறும் இப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளோம். பயண தேதிகளுக்கும், பயணம் குறித்த விரிவான விவரங்களுக்கும், பயண பதிவுக்கும் www.ponniyinselvantours.com என்ற இணையதளத்தை பார்வையிடுக.

Kalki Group links:
Website | Menpena | Ponniyin Selvan Tour | Facebook | Twitter | Instagram | Youtube Channel

Advertisers




© Copyright 2020 Tamilonline