பூசணி கார அப்பம்
|
|
|
|
தேவையான பொருட்கள் பூசணிக்காய் - ஒரு கீற்று அரிசி மாவு - 1 கிண்ணம் கோதுமை மாவு - 1/4 கிண்ணம் வெல்லம் - 1-1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம் ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை பூசணியை கொப்பரைத் துருவியில் துருவி வாணலியில் நெய் விட்டு நன்றாக வதக்கிக் கொண்டு, தேங்காய்த் துருவலை மிக்ஸியில் அரைத்து அரிசி மாவு, கோதுமை மாவு, ஏலக்காய்ப் பொடி தூவி, பூசணி, தேங்காய் எல்லாம் போடவும். வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, மாவில் ஊற்றி தோசை மாவு பதத்திற்குக் கரைக்கவும். எண்ணெயில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி அடுப்பை நிதானமாய் வைத்து சிறுசிறு அப்பங்கள் செய்து பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கவும் மிகவும் சுவையான அப்பம் இது. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
பூசணி கார அப்பம்
|
|
|
|
|
|
|