மே 2023: வாசகர்கடிதம்
May 2023
ஏப்ரல் மாதத் 'தென்றல்' இதழில் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸா அவர்களின் நேர்காணல் படித்தேன். அவருடைய வளமான குரலும், தெய்வீகச் சிரிப்புடன் ஆடம்பரமற்ற அமைதியான அனைவரையும் வசீகரிக்கும் சாந்தமான வார்த்தைகளும் அருமை. தமிழ் தெரிந்த அனைவரும் அவரது நண்பர்களே. விஞ்ஞானம் அதிக முன்னேற்றம் அடையாத சில வருடங்களுக்கு முன்னர், தனிநபராக மறக்கமுடியாத இட்ஸ் டிஃப் ரேடியோ நிகழ்ச்சியை மிகமிகச் சிறப்பாக நடத்தி இங்கு வாழும் தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
நாடகங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார மேலும்...
|
|