தென்றல் பேசுகிறது...
Jun 2023
"மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி" என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அந்தக் கோல்தான் வளையாது, நீதி, நெறி வழுவாது நிற்கும் செங்கோல். அதன் அடையாளமாக, தமிழகத்தின் சிறந்த ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனம், இந்தியா சுதந்திரம் பெற்ற புனித இரவில், ஆட்சி மாற்றத்தின் குறியீடாக, அழகிய செங்கோல் ஒன்றை அன்றைய பிரதமரின் கரங்களில் வழங்கியது. அக்காலத்தில் தொடங்கி, அண்மைக் காலம்வரை தொடர்ந்துவரும் சான்றோருக்கு எதிரான மனச்சாய்வுகளின் காரணமாக, அந்தச் செங்கோல் 'கைத்தடி' எனப் பெயரிடப்பட்டு ஒரு கண்காட்சியில் வை மேலும்...
|
|