Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மல்லிகா கார்கேயா பரதநாட்டிய அரங்கேற்றம்
நிவேதா சந்திரசேகர் கர்நாடகக் கச்சேரிகள்
இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் புறநானூறு கருத்தரங்கம்
அக்ஷயா இசைப்பள்ளியின் தியாகராஜ ஆராதனை
டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சுஹிர் பொன்னுசாமியின் 'பக்திப் பாமாலை' குறுந்தகடு
இரண்டு நாடகங்கள்
- சீதா துரைராஜ்|ஏப்ரல் 2010|
Share:
பிப்ரவரி 20, 2010 அன்று கான்கார்ட் முருகன் கோவில் நலநிதிக்காக சென்னை கலாநிலையத்தாரும் விரிகுடாப் பகுதிக் கலைஞர்களும் இணைந்து ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கத்தில் 'காதல் கல்யாண வைபோகமே', 'மறுபக்கம்' என்னும் இரு நாடகங்களை அளித்தனர்.

'காதல் கல்யாண வைபோகமே'

காதல் முயற்சிகளில் தான் தோல்வியுற்றதால் அருணாசலம் தன் பையன் கணேஷைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். கணேஷ் அதை விரும்பவில்லை. எப்படிக் காதல் செய்வது என்று தந்தை வழி காண்பிக்கிறார். கணேஷ் முடியாமல் தன் நண்பன் ரமேஷின் உதவியை நாடுகிறான். கணேஷ் காதல் கல்யாணம் செய்து கொள்கிறானா அல்லது அவனது தந்தை அருணாசலம் மனம் மாறுகிறாரா என்பது நாடகத்தின் கரு.

“ஹலோ மாமா, ஹலோ தாத்தா” என ஸ்நேஹா, மனோ கூறுவதும் பின்னணியில் ”நெஞ்சு பொறுக்குதில்லையே” எனப் பாடல் ஒலிப்பதும் படுஜோர்.
பஸ் நிலையம், கோவில் கூட்டத்தில் போய் பெண்ணைத் தேடுடா என நண்பன் யோசனை சொல்ல சரிபட்டு வரவில்லையே என கணேஷ் முழிக்க, படிப்படியா லவ் பண்ணுடா என்று சொல்ல, ஏன் கிலோ கணக்கில் இல்லையா என்று இவன் கேட்பதும், காதல் பண்ண ஸ்டெப் 1, ஸ்டெப் 2 என சொல்லித் தருவதும், பின் கணேஷ் தன் கனவில் கறுப்பு குண்டுப் பெண் வருவதை விவரிப்பதும் யாவும் நகைச்சுவை ததும்ப இருந்தன. நன்கு ரசிக்க முடிந்தது. பெத்த பிள்ளையை லவ் பண்ணுடா என சொல்லும் அப்பா கோடியில் ஒருத்தண்டா என அப்பா சொல்வதும், காட்சி முடிந்து பின்னணியில் ஒலிக்கும் காதல் கானங்களில் தன்னை மறந்து அனுபவிப்பதிலும் அப்பாவின் நடிப்பு அபாரம்.

கடைசியில் கணேஷ், ஸ்நேஹாவை மனோ என்னும் பேத்தியுடன் அழைத்து வந்து அப்பாவிடம் ஆசிர்வாதம் பண்ணுங்கோ, காதல் கல்யாணம் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி எனக் கூற அதிர்ச்சி அடைந்த அப்பாவிடம் “ஹலோ மாமா, ஹலோ தாத்தா” என ஸ்நேஹா, மனோ கூறுவதும் பின்னணியில் ”நெஞ்சு பொறுக்குதில்லையே” எனப் பாடல் ஒலிப்பதும் படுஜோர்.

ஸ்நேஹாவின் முதல்புருஷன் காஞ்சிபுரம் சம்பந்தம், வீட்டுக்கு வந்து பரிமளம் என்னைக் கை விடாதே என்பதும் ஸ்நேஹா, கணேஷ், சம்பந்தம் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு கணேஷ் கூட 116 நாள், சம்பந்தம் கூட 115 நாள் வாழ்ந்ததில் ஒருநாள் கூட கணேஷிடம் வாழ்ந்ததால் கணேஷ்தான் என் கணவன் எனக் கூறும் ஸ்நேஹாவின் நடிப்பு சிறப்பு.

கடைசியில் காவி உடையுடன் நான் சொத்தை எழுதி வைத்துவிட்டு ஹரித்வார், ரிஷிகேசம் போறேண்டா என தந்தை கூறுவதும், கணேஷ் திகைப்பதும் திடீர் என ஸ்நேஹாவுக்கு டி.வியில் ஹீரோவோட அம்மா ரோலில் நடிக்க அழைப்பு வர, தம்பி என ஸ்நேஹா கணேஷிடம் சொல்ல, “உனக்குக் கல்யாணம் ஆகலையா” என அப்பா ஸ்நேஹாவிடம் அசடு வழிவது என யாவும் நடிப்பின் உச்சகட்டம்.

எல்லாம் கணேஷூம் ரமேஷூம் சேர்ந்து போட்ட நாடகம் என கணேஷ், அப்பாவிடம் சொல்லிவிடுகிறான். என் நண்பன் ரமேஷின் தங்கை சுலோவை கல்யாணம் பண்ணிக்கறேன் என்கிறான். சுலோவிடம் ஒரு இது என்று சொல்லவில்லையே ஏண்டா என அப்பா கேட்க, “நானே ஒரு ஸ்லோ” என கணேஷ் கூறுவதுடன் நாடகம் முடிகிறது. கணேஷ், ரமேஷின் நகைச்சுவை உரையாடல் அருமை.

வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை வசனங்களை அள்ளி வீசியுள்ளார், நாடக ஆசிரியர். நடித்த கலைஞர்கள் அனைவரும் அநாயசமாக நடித்து சிரிப்பு ஒலியில் அவையை அதிரச் செய்தனர். வாய்விட்டுச் சிரிக்க நோய்விட்டுப் போகும் என்பதற்கேற்ப நாடகம் அமைக்கப்பட்டுள்ளது.
'மறுபக்கம்'

குடும்ப சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் முகுந்தன், தன் பெற்றோர் 93 வயது தாத்தா ஆகியோரை மிகவும் நேசிக்கிறான். பெற்றோர் ஏற்பாடு செய்த பெண் மாலாவை மணக்க விரும்புகிறேன். ஆனால் மாலாவின் தாத்தா முதியோர் இல்லத்தில் இருப்பதால் முடிவு எடுக்கக் குழப்பமடைந்து பின் மாலாவை மணக்கிறான். முகுந்தன் தந்தை வரதராஜன் பழைய சம்பிரதாயப்படி வயதான தந்தையை கவனித்துக் கொள்கிறார். முகுந்தன், மாலா திருமணம் முடிந்த பின்னர் இருவரையும் தனிக்குடித்தனம் போகச் சொல்கிறார். முகுந்தன் தன் பெற்றோரை கவனித்துக்கொள்ள விரும்புகிறான். தாத்தாவும் பேரனுக்குத் துணைபுரிகிறார். வரதராஜன் பிடிவாதமாய் தனிக்குடித்தனம் போகச் சொல்கிறார். முகுந்தன் தனிக்குடித்தனம் போகிறானா, குடும்பத்தோடு சேர்ந்து இருக்கிறானா என்பதுதான் நாடகத்தின் கரு.

தாத்தா, சார்ந்து இருப்பது வேறு, சேர்ந்து இருப்பது வேறு. எப்போதும் சுதந்திரமாக இருப்பது சார்ந்து இருப்பதை விட மேல் எனக் கூறி உண்மையின் யதார்த்தத்தை விளக்குவது மிகவும் அருமை.
முகுந்தன் மாலா திருமணம் முடிந்து குடும்பத்தோடு விசேஷத்துக்கு வெளியூர் போவதால் மாலாவின் அப்பாவிடம் தான் திரும்பி வரும்வரை தாத்தாவைப் பார்த்துக் கொள்ளுங்கள் என வரதராஜன் கேட்கிறார். மாலாவின் அப்பா தாத்தாவை பார்த்துக்கொள்ள வருகிறார். எனக்கு 300 ரூபாய் சம்பளம், என் பெண் 4000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாள் என 4 தடவை சொல்லிட்டேன். கிழத்திடம் என்ன பேசுவது என்று தெரியவில்லையே என முழிப்பதும் உன் சொந்த அப்பாவைக் கூட வைத்துக் கொள்ளாமல் 93 வயது தாத்தாகூட இருப்பது நல்லது என்கிறாயே என்னும் போது மாமா, நமஸ்காரம், கீழே விழுந்துட்டேன் தடால் என்று கிழவர் காலில் விழுவதும், நீ என்னை பார்த்துக்கறது போக நான் உன்னைப் பார்த்துக்கறேன் என கிழவர் கூறுவதும் படு தமாஷ்.

தாத்தா, சார்ந்து இருப்பது வேறு, சேர்ந்து இருப்பது வேறு. எப்போதும் சுதந்திரமாக இருப்பது சார்ந்து இருப்பதை விட மேல் எனக் கூறி உண்மையின் யதார்த்தத்தை விளக்குவது மிகவும் அருமை.

முகுந்தனுக்கு அமெரிக்காவிலுள்ள ஐ.டி. கம்பெனியிலிருந்து வேலைக்கு அழைப்பு வர, மாலாவும் தன் கம்பெனியும் அமெரிக்காவில் உள்ளது என்று கிளம்ப தாத்தா கைக் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு நானும் ஹோமில் சேர்ந்து விடுகிறேன் எனச் சொல்வது மிக தத்ரூபம்.

கடைசியில் முகுந்தனின் அப்பா, தாத்தாவிடம் பையனை அமெரிக்கா அனுப்புவதற்காக தான் ஆடிய நாடகம்தான் பையனை தனியாகப் போகச் சொன்னது என ஒத்துக் கொள்கிறார். பேரன், மனைவி இருவரும் விமானம் ஏற, தாத்தா பேரனை பில்கேட்ஸ், நாராயண மூர்த்தி மாதிரி சிறப்பாக வருவான் என ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

ஐ.டி. உலகின் யதார்த்தத்தைக் குடும்பப் பின்னணி சம்பிரதாயங்களோடு இணைத்து நாடகம் புனைந்து பிரமாதமாக வழங்கியுள்ளார் நாடக ஆசிரியர். இருநாடகங்களிலும் பங்கு பெற்ற யாரும் யாருக்கும் சளைத்தவரில்லை என அநாயசமாக நடித்துத் திறமையை வெளிப்படுத்தினர். மறுபக்கத்தின் அடுத்த புதுபக்கம் எப்போது வளைகுடா பகுதிப்பக்கம் வரபோகிறது என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டார் நாடக ஆசிரியர்.

சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிபோர்னியா
More

மல்லிகா கார்கேயா பரதநாட்டிய அரங்கேற்றம்
நிவேதா சந்திரசேகர் கர்நாடகக் கச்சேரிகள்
இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் புறநானூறு கருத்தரங்கம்
அக்ஷயா இசைப்பள்ளியின் தியாகராஜ ஆராதனை
டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சுஹிர் பொன்னுசாமியின் 'பக்திப் பாமாலை' குறுந்தகடு
Share: 




© Copyright 2020 Tamilonline